நேராக படுப்பது, குப்புறப் படுப்பது, பக்கவாட்டில் படுப்பது, பொம்மை அல்லது உடன் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு படுப்பது என இந்த 4 முறையில் தான் பெரும்பாலும் அனைவரும் உறங்குவார்கள். இந்நிலைகளை வைத்து தனிப்பட்ட நபரின் குணாதிசயங்கள், பண்புகள் எப்படி இருக்கும் என இனிக் காண்போம்.
குப்புறப் படுப்பது
குப்புறப் படுத்துக் கொண்டு தலையணைக்கு கீழ் கைகளை அணைத்து கொள்வது போல வைத்துக் கொண்டு உறங்கும் பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் எதுவாக இருப்பினும் அதை வரவேற்கும் குணம் கொண்டிருப்பார்கள். மகிழ்ச்சி, இகழ்ச்சி, இன்பம், துன்பம் என உணர்வு ரீதியாக இவர்கள் அதிக தாக்கம் கொள்வார்கள்.
கட்டியனைத்துக் கொண்டு உறங்குவது
தலையணை, பொம்மை அல்லது பக்கத்தில் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்டுள்ள பெண்கள் நம்பகமானவர்களாக திகழ்வார்கள்.
எந்த விஷயமாக இருந்தாலும் இவர்கள் வெளிப்படையாக வெகுளியாக பேசிவிடுவார்கள். உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசுவது போன்று இருக்க மாட்டார்கள். இவர்கள் நல்ல தோழியாக திகழ்வார்கள்.
நேராகப் படுப்பது
நேராக படுத்து உறங்கும் பெண்கள் இயற்கையாகவே அமைதியானவர்களாகவும், கூச்ச சுபாவம் கொண்டுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
தங்களை தாங்களே உயர்வாக எண்ணிக்கொள்வது, தன்னம்பிக்கை இவர்களது விஷேசமான குணம் என கூறலாம். இவர்களிடம் பாஸ், மேனேஜர் போன்ற தலைமை வகிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.
பக்கவாட்டில் படுப்பது
அமைதியான குணாதிசயம், இரகசியத்தை வெளியே கசிய விடமாடார்கள். இவர்களை சற்று அதிகமாகவே நீங்கள் நம்பலாம்.
எவ்வளவு கடினமாக இருப்பினும், கோவப்படாமல், அவசரப்படாமல் அதற்கான தீர்வுகளை காண்பவர்களாக திகழ்வார்கள். உத்வேகமாகவும், மகிழ்ச்சியான நபர்களாகவும் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக