தற்போது மாறி வரும் உணவுப் பழக்கவழக்கங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை அதிகமாக பாதிக்கிறது.
 மாறி வரும் வாழ்க்கை முறை, அதிகப்படியான வேலைப்பளு ஆகியவை மன அழுத்ததை கொடுக்கின்றன. இது இதய ஆரோக்கியத்தை கெடுக்கிறது. இதனால் நமது ஆயூட்காலமும் குறைகிறது.
ஆனால் சில ஆரோக்கியமான உணவுகளை நாம் தினமும் எடுத்து வந்தால் இத்தகைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
இஞ்சி
இஞ்சியை ஜூஸ் செய்தோ அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பல்வேறு நோய்கள் நீங்கும். அதிலும் இரத்த அழுத்தம், இதய நோய், செரிமான பிரச்சனை போன்றவை நீங்கும்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். அதுவும் ஆப்பிள் உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, இதய நோய் வராமல் தடுக்கும்.
பூண்டு
தினமும் ஒரு முழு பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு வந்தால், வாயு பிரச்சனை நீங்குவதோடு, இரத்த குழாயில் சேரும் கொழுப்புக்கள் கரைந்து, இரத்த அழுத்தம் குறைந்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
உலர் திராட்சை
உலர் திராட்சையை ரோஸ் வாட்டரில் ஊற வைத்து பின் அதை பிசைந்து வடிகட்டி, அந்த நீரைக் குடித்து வந்தால், இதயப் படபடப்பு குறைவதோடு, பலவீனமாக உள்ள இதயமும் வலிமையடையும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால், கொழுப்புக்கள் கரையும். இதயம் பலமடையும். அதிலும் அந்த நெல்லிக்காயுடன், இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வருவது நல்லது.
அதனால் தினமும் காலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வரலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக