சமகாலத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் அல்லது பின்தங்கிய வாழ்க்கை முறையை வாழ்பவர்களின் மனநிலை, பண்பு என்பன அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
DNA ஊடாக கடத்தப்படும் இந்த இயல்புகளின் ஊடாக உடல் பருமன் அதிகரிப்பும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மனித உடலில் காணப்படும் பரம்பரை அலகுகளில் (DNA) வாழும் சூழலுக்கு ஏற்ப இரசாயனவியல் மாற்றத்திற்கு உள்ளாவதாகவும், பின்னர் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ் வாழ்க்கைமுறையின்போதான மன அழுத்தம், பட்டினி இருத்தல் போன்ற இயல்புகள் விந்து மற்றும் கரு முட்டையினூடாக கடத்தப்படுவதில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக