விபத்துக்களில்
கால் பாதங்களை இழந்தவர்களுக்கு உதவக்கூடிய வகையில் செயற்கையானதும்
உணர்ச்சி உடையதுமான பாதங்களை ஆஸ்திரியா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இலத்திரனியல் சுற்றுக்கள் மற்றும் 6 சென்சார்களை உள்ளடக்கிய இப் பாதத்தினால் சிறிய கற்கள் போன்றவற்றினைக் கூட உணர முடியும்.
இச் செயற்கைப் பாதனமானது 2007ம் ஆண்டு தனது பாதத்தை இழந்த Wolfgang
Rangger எனும் 54 வயதான நபரில் ஆறு மாதங்களாக பொருத்தி
பரீட்சிக்கப்பட்டுள்ளது.
100 சதவீதம் நிஜமான பாதங்களைப் போன்றே உணர்ச்சியை ஏற்படுத்தும் இந்த
செயற்கை பாதத்தின் விலையானது தற்போது 11,000 அமெரிக்க டொலர்களாக
காணப்படுகின்றது, எனினும் இதனை குறைவான விலையில் சந்தைப்படுத்தக்கூடிய
வகையில் தயாரிக்க குறித்த விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக