தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 ஜூன், 2015

வியர்வையை பெருக்கி உடல் சூட்டை தணிக்கும் மூலிகை


சிறந்த மூலிகையான நன்னாரியின் இலைகள், வேர், பட்டை என அனைத்துமே பயன்தருபவை ஆகும்.
ஒற்றைத்தலைவலி, செரிமானம், பால்வினை நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வேதிப்பொருட்கள்:
இலைகளிலிருந்து ரூட்டின்(Routine), வேர்களிலிருந்து ஹெக்ஸாட்ரை அக்கோன்டேன்(Hexatriacontane), லூபியால்(Lufial), ஆல்பா அமரின்(Alpha amerine), பீட்டா அமரின்(Beta Amerine), இட்டோஸ்டிரால்(etosterol) ஆகியவற்றில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.
பயன்கள்:
சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது.
நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர நீர்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.
ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும்.
வியர்வை நாற்றம் நீங்க மிளகு, உப்பு, புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
நன்னாரி வேர்ப்பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும் நீங்கும்.
நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக்கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக