முளைகட்டிய உணவுகளை தினமும் ஏதேனும் ஓர் உணவில் எடுத்துக்கொள்வது உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லதாகும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு முளைகட்டிய உணவுகள் ஒரு சிறந்த உணவாகும்.
காரணம் இவை குறைவான கலோரிகளை கொண்ட உணவாகும்.
இவை இரத்தத்தினை சுத்தம் செய்யவும், மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றன.
மேலும், இவற்றில் என்ஸைம்கள்(Enzyme) நிறைந்துள்ளதால் செரிமானப்பிரச்சனைகள் ஏற்படாது.
ஆனால் முளைகட்டிய பயிரால் சில தீமைகளும் உண்டு.
தீமைகள்
முளைகட்டிய உணவுகள் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்கள் வளர ஏற்ற இடமாகும்.
இதனால் முளைகட்டிய உணவுகளை சமைப்பதற்கு முன் பலமுறை தண்ணீரில் உப்பு போட்டு 4-5 முறை நன்றாக கழுவ வேண்டும்.
இல்லையேல் வயிற்றுப்போக்கு, வாந்தி காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.
முளைகட்டிய உணவுகள் வயதானவர்களுக்கு செரிமானம் ஆகாமல் போக வாய்ப்புகள் உண்டு.
எனவே இவர்களுக்கு இவற்றை சிறிது நேரம் நீராவியில் வேகவைத்து கொடுக்க வேண்டும்.
நீண்ட நாட்கள் Store செய்து வைத்த முளைகட்டிய உணவுகள் மிகவும் ஆபத்தானது, எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
கடைகளில் முளைகட்டிய உணவுகள் பாக்கெட்டுகளில் விற்பனையாகின்றன, இவற்றை வாங்கி உண்பதை தவிர்த்தல் மிகவும் நல்லது.
காரணம் அவை கெடாமல் இருக்க பல இராசயனங்கள் அவற்றில் கலக்கப்படும், இவற்றை வாங்கி பச்சையாக சாப்பிட்டால் உடல்நலம் கெடுவது உறுதி.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக