மோசமான உணவுப்பழக்கத்தின் காரணமாக நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
நெஞ்செரிச்சல் பிரச்சனை இன்றைக்கு பலரையும் பாதிக்கிறது. வாயில் சுரக்கின்ற அமிலம் உணவுப்பாதையில் திரும்ப வருவதால் வயிறு அல்லது நெஞ்சில் வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது.
சரியான உனவுப்பழக்கத்தின் மூலம் இந்தப்பிரச்சனையை சரியாக்கிக்கொள்ள முடியும்.
சில சமயங்களில் மன அழுத்தம், மாத்திரைகள் இவற்றாலும் கூட இந்த அசிடிட்டி உருவாகிறது.
பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் புரோமிலெயின் ஆகிய என்சைம்கள் அதிக அளவில் உள்ளன.
எனவே இந்தப்பழங்களை அதிக அளவில் சாப்பிடலாம். முட்டைக்கோஸ் சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது.
செரிமானப்பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் என்னும் அமினோ அமிலம் முட்டைக்கோஸில் நிறைய உள்ளது.
எனவே முட்டைக்கோஸை சாறகவோ அல்லது சாலட் ஆகவோ அல்லது சூப்பாகவோ அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இஞ்சி டீ குடிப்பது நல்லது. செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை இது தூண்டி விடுகிறது.
அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மசாலா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள், அமிலத்தன்மை நிறைந்த உணவுகளான தக்காளி, சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக