மருத்துவர்கள் தினம்
--------------------------
பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்து காந்தியுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காக போராடியதோடு மட்டுமல்லாது,இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவுமிருந்து அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் பொறுப்பு வகித்து தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனையாக்கி முதல் அமைச்சராக இருந்த காலத்தில் கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்த டாக்டர் பிதான் சந்திரா ராய்(Dr. Bidhan Chandra Roy) நினைவாக இந்தியாவில் மருத்துவர்கள் தினம் கொண்டாடபட்டு வருகிறது
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30-ம் தேதி டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் அவரின் பிறந்த தினமும் இறந்த தினமும் ஒன்றான ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
கடவுள் உண்டா இல்லையா என்ற விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால் அவர் மருத்துவராகத்தான் இருக்கமுடியும்..
#கண்ணெதிரே இருக்கும் உயிரை காக்கும் சாமிகளான மருத்துவர்களின் தினத்தை வணங்கி போற்றுவோம்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக