இணுவில் மைந்தனின் சிறப்பு
சேர்.பொன். இராமநாதன்.
சைவத் தமிழுலகில் தலைசிறந்த பெரியார் வரிசையில் சேர்.பொன். இராம நாதனுமாவார். இவர் கல்வியால், ஆன்மீகச் சிந்தனையால், கலையார்வத்தினால் சிறந்து விளங்கினார். மானிப்பாயிலே பிறந்தார். பட்டங்கள், பதவிகளைப் பெற்று வேறு இடங்களிற்கு சென்றமையால் பிறந்த இடத்தில் தொடர்ந்து வாழமுடியவில்லை.
தென்பகுதியில் சிங்கள, இஸ்லாமியரிடையே ஏற்பட்ட கலவரத்தை பிரிட்டிஸ் அரச சபை முதல்வரிடம் சென்று பேசி சிறப்பான முறையில் பேசித்தீர்த்து வைத்தார். இலண்டனில் இருந்து இலங்கை வந்த போது சிங்கள மக்களே துறைமுகத்திலிருந்து தாமே ஊர்வலமாக வண்டியினை இழுத்தமை இவருடை பேச்சுத் திறமையினையும், தலமைத்துவ பண்பிணையும் வெளிப்படுத்துகின்றது. “சேர்”என்ற பட்டமும் வழங்கப்பட்டமையும் சட்ட நிரூபன சபையில் அங்கத்தவர் பதவியைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 20ஆம் நூற்றாண்டுப் புலவர்களில் ஒருவராகவும் குறிப்பிடப் படுகின்றார். தமிழவேள் இவருடைய ஊர் மருதனார் மடம், இணுவில் என தமிழ் பலவர் மாநாட்டு சிறப்பு மலரில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலே சிறந்த சிவன் ஆலயம் ஒன்றினை நிறுவினார். இன்றுவரை இதனை இவரது சந்ததியினர் சிறப்புடன் பராமரிக்கின்றனர். சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்திலே திருநெல்வேலியிலே பரமேஸ்வராக் கல்லூரியையும், பரமேஸ்வரா ஆலயத்தையும் அமைத்தார். இணுவில் கிராமத்திலே 25 ஏக்கர் காணியை வாங்கி பெண்களுக்கென இராமநாதன் கல்லூரியை 1913 இல் நிறுவினார். தமிழர்களின் பண்பாட்டினைப் பிரகாசிக்கும் வகையிலே மாணவரது செயற்பாடு அமையவேண்டுமென சித்தம் கொண்டார். இக்கல்லூரியின் வடமேல் திசையில் தனக்கென ஒருமனை அமைத்து அற வாழ்வினை மேற்கொண்டார்.
தன்னுடைய சமாதியை அச்சூழுலிலே அமைக்கவேண்டும் என்ற நோக்கிலே அதேயிடத்தில் ஒரு ஆலயம் அமைக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். இவருடைய மருமகன் சு.நடேசம்பிள்ளை இவருடைய கனவினை நனவாக்கி வைத்தார். இவரது உருவச் சிலை கொழும்பில் அமைக்கப்பட்ட பொழுதிலும் இவர் வாழ்ந்த இடமான இராமநாதன் கல்லூரி முன்றலிலும் ஒரு முழுஉருவச்சிலை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1938-1940 காலப்பகுதியில் இவரது சமாதியடைந்த இடத்தில் இராமநாதேஸ்வரன் கோயில் இந்திய சிற்பக்கலை மரபினை ஒட்டி இந்தியக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு கருங்கற்களால் கட்டப்பட்டு புனிதமாக பேணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்தாகும்.
நன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்
இணுவில் மண்ணுக்கு சொந்தமானவர் தான் இவர் மானிப்பாய் ஆஸ்பத்திரியில் பிறந்தவர் .ஆனால் இணுவில் பெற்றர்கள்
பிற்காலத்தில் பரமேஸ்வராக் கல்லூரி (jaffna campus ). மருதனார்மடம் இராம நாதன் கலூரி இணுவில் (இப்போதைய நுண்கலை கலூரி )என்பவற்றை கட்டியவர்
இவரின் மனைவியார் யார் தெரியுமா?
பரமேஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக