தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 ஏப்ரல், 2012

சிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்!!


சிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்: பகுதி 5

உங்கள் குழந்தைகள் இணையத்தில் பயன்பெறுவதற்கு மிகச்சிறந்த வலைத்தளங்கள் சிலவற்றை இங்கு தொடர்ச்சியாக தந்த வண்ணம் உள்ளோம், இன்னும் தரவிளைகிறோம்.
இதுவரை இத்தளங்கள் பற்றி அறிந்திருக்காவிடின் முதலில் நீங்கள் சென்று பாருங்கள், பின்னர் இத்தளங்களில் உள்ள வசதிகளை புரியும் வகையில் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். நிச்சயம் பயனுடையதாக இருக்கும். அவ்வகையில்
United Nations Cyberschoolbus (www.un.org/pubs/cyberschoolbus/) : உங்களின் குழந்தைகள் விளையாட்டுக்கள், பள்ளிக் கல்வி போன்றவற்றை கற்பதோடு நின்று விடமால். அரசியல், சமூகம் ஆகியவற்றையும் சிறிது கண்டறிய ஆர்வமாய் இருப்பர். ஐக்கிய நாடுங்களின்(United Nations) ஆதரவுடன் ஆறு மொழிகளில் செயல்படும் இத் தளத்தில் சிறார்களுக்கு ஏற்ப பல விழிப்புணர்வு பாடங்களை கற்றுத்தருகிறது, அதாவது அமைதி,ஆயுதம்,  வறுமை, பாகுபாடு போன்ற சமூகவியலான விடயங்களை சொல்லித்தருகிறது.
மேலும் வரைதல் கலைப் போட்டிகளும் உண்டு. அதுமட்டுமல்லாது உங்கள் சிறார்களுக்கு தேவையான விளையாட்டுக்கள் மற்றும் வினாடிவினாக்களையும் இங்கு காணலாம். ஆனால் அவைகள் வித்தியாசமன முறையில் இருக்கும். ஊதாரணமாக சிறார்களின் அறிவை சோதிக்கும் வகையில் உலக நாடுகளின் கோடிகளை பற்றி கேட்கும் flag tag எனும் விளையாட்டை விளையாடலாம், ஆக உங்களின் சிறார்கள் சமூகம் மற்றும் அரசியல் சம்பந்தமான பொது அறிவு விடயங்களை இத் தளத்தின் மூலம் கற்று பயன் அடையலாம்.
மேலும்:

சிறுவர்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள் : பகுதி 2

சிறுவர்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள் : பகுதி 3

சிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள் : பகுதி 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக