உடல் பருமனைக் குறைக்க எளிய உணவு
பெரும்பாலானவர்களை அதிகம் பாதிப்பது உடல் பருமன் அதிரிப்பது தான். உடல் உழைப்பு குறைவினாலும், உணவுப் பழக்கத்தினாலும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது.
இதனால் கவலையடைபவர்கள் ஏராளம். உடல் பருமனை குறைக்க எளிய உணவு முறையை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்துவந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கலாம்.
உடல் பருமனானவர்கள் பப்பாளிக்காயைச் சமைத்து சாப்பிடுவதினால் உடல் மெலியும். சுரைக்காயை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.
மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் உடல் பருமன் குறையும்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகிவந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் அழகு பெறும்.
இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.
பூண்டும், வெங்காயமும் கொழுப்புச் சத்தை குறைக்கும் திறன் கொண்டது.. இதனை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.. வாழைத்தண்டில் நார்ச் சத்து உள்ளது.. உடலுக்கு மிகவும் நல்லது..ஆனால் சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை வாழைத் தண்டு சாறுக்கு இருக்கின்றது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக