இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.
Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய ‘த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற புத்தகம் மிகப் பிரபலமானது.
பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.
இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம்.
தற்போது ஹாக்கிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அது இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ளார்.
இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக தனது சமீபத்திய ‘தி கிரான்ட் டிசைன்’ (The Grand Design) என்ற நூலில் எழுதியுள்ளார் ஹாக்கிங்.
இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே.
சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது.
பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து ‘ஏ பிரபஞ்சமே உருவாகு’ என்று கூறினார் என்று சொல்வது முட்டல் தனம் என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.
தற்போது முற்றிலும் இது இயற்பியல் சார்ந்த நிகழ்வு என்று அடித்துக் கூறியுள்ளார் ஹாக்கிங்.
தனது புதிய புத்தகத்தில் அவர் கூறுகையில், பிக் பாங் காரணமாக சூரிய குடும்பமும், கோள்களும் உருவாகின. பூமியும் உருவானது. இதற்குக் காரணம், இயற்பியலின் விதிகளால் ஏற்பட்ட விளைவுகளே. இங்கு கடவுளுக்கு எங்குமே இடமில்லை. முற்றிலும் அறிவியல் சார்ந்த நிகழ்வு இது.
என் முன் இரண்டு கேள்விளை வைக்கிறேன். முதல் கேள்வி, நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காக கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினாரா என்பது.
2வது கேள்வி, அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரபஞ்சம் உருவானதா என்பது. இதில் நான் 2வது கேள்வியையே ஆதரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அறிவியலின் கோட்பாடுகளை ‘கடவுள்’ என்று கூறிக் கொள்ளலாம். அதேசயம் இதைத் தவிர வேறு எந்த கடவுளும் பிரபஞ்சத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து என்கிறார் ஹாக்கிங்.
இருப்பினும் பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பாக பிளாக் ஹோல்கள். இந்த ‘இருண்ட சக்தி’ பிரபஞ்சம் உருவானபோது ஏற்பட்டதா அல்லது பிரபஞ்சம் உருவானபோது அழிந்து போனதின் மிச்சமா என்பது இதுவரை விளங்கவில்லை.
தற்போதைக்கு பிரபஞ்சத்தின் வரலாறு குறித்து உலக அளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள ஒரே முடிவு பிக் பாங் தியரி மட்டுமே. மிகப் பெரிய வெடிப்புப் பிரளயத்தைத் தொடர்ந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக இந்த பிக் பாங் தியரி கூறுகிறது. 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட வெடிப்பு நடந்ததாக கடந்த ஆண்டு கணித்துக் கூறப்பட்டது.
தற்போது வெளியாகியிருக்கும் ஹாக்கிங்கின் நூலும் பிரபஞ்ச வரலாறு குறித்த புதிய பார்வைக்கு வித்திடும் என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக