ஒரு காலத்தில , காமராஜர் காமராஜர்னு ஒரு அரசியல்வாதி இருந்தாராம்....!
மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினாராம்..
'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினாராம் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன்!
தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டாராம் இந்த காமராஜர்....!
விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்களெல்லாம் அழுதார்களாம்.."'இதுதான்யா ஜனநாயகம்....ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னாராம் ..!
ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் - இவ்வளவுதானாம் ....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக