பிரான்ஸ் தேசத்துக்கும் பிரிட்டனுக்கும் 1814ல் நடந்த போர் முடிந்திருத்தது. சிறைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலேய ராணுவங்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்தது. அவர்களை அழைத்துச் செல்ல கப்பல் வரும் வரை.. அவர்களை விருந்தினராகஏற்று.. கவனித்து உணவு வழங்கும் பொறுப்பு உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டு நாள் சென்றது.. பிரிட்டிஸ் தளபதி ஒருவர் பிரான்ஸ் அதிகாரியைச் சந்தித்து சொன்னார். "கப்பல் வரும் வரை எங்களை மறுபடியும் மீண்டும் சிறைச்சாலையிலேயே அடைத்து விடுங்கள் பிரபு..!" என்றார். "ஏன்.. உங்களை கவனித்து கொள்ள வேண்டிய குடும்பம் மோசமாக நடந்து கொண்டார்களா..?" என்று கேட்டார் பிரான்ஸ் தளபதி.
"ஐயோ.. அப்படி இருந்தால் பிரச்சனையே இல்லையே.. நாங்கள் தங்கி இருப்பது ஒரு விவசாயின் வீட்டில் அந்த குடும்பத்தில் கணவன், மணைவி, ஆறு குழந்தைகள் இருக்கின்றனர்.. போர் காரணமாக எங்கும் உணவுப் பற்றாக்குறை.. அவர்களிடம் இருக்கும் தானியங்கள் அவர்களுக்கே அரை வயிறுதான் காணும்.. அதையும் எங்களுக்கு இன்முகத்துடன் வழங்கிவிட்டு.. அவர்கள் இரண்டு நாட்களாகப் பட்டினி கிடப்பதைக் கண்டுபிடித்தோம்.. சிறையின் கொடுமைகளை எங்களால் தாங்கமுடிகிறது.. இந்த ஏழைகளின் கருணையை தாங்க முடியவில்லை..!" என்றார் பிரிட்டிஷ் தளபதி. ஆங்கிலேயர் முன் பிரான்ஸ் தளபதி பெருமையோடு தலை நிமிர்ந்தார்.
(கர்வம் தலை குனிய வைக்கும்.. கருணை தலை நிமிர வைக்கும்..)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக