தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 11, 2012

பாலியல் வன்புணர்வு குறித்து டெல்லி நகரின் காவல்துறையினர் பெரும்பாலானோர் கொண்டிருக்கும் கருத்தைப் (?!?) பாருங்கள்..



இந்தியாவிலேயே அதிகமான அளவிலான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவது (புகாரின் அடிப்படையில்) டெல்லி நகரில்தான்... பாலியல் வன்புணர்வு குறித்து அந்நகரின் காவல்துறையினர் பெரும்பாலானோர் கொண்டிருக்கும் கருத்தைப் (?!?) பாருங்கள்....


"பாலியல் வன்புணர்வுக்கு காரணமே பெண்கள்தான். அவளுடைய நடத்தைதான் ஆண்களைத்தூண்டுகிறது"


"பெண்கள் தங்களின் எல்லையினை மீறாமல், ஒழுங்கான ஆடைகளை அணிந்தால், இதெல்லாம் நடக்கவே நடக்காது"

"அவங்க அம்மா சரியா இருந்திருக்க மாட்டா... அதனால இவளும் சரியா இருந்திருக்கமாட்டா... அதான் இப்படி நடந்திருக்கு"

"பெண்களோட ஒத்துழைப்பு இல்லாம இதெல்லாம் நடக்காது..."

"பெண்கள் இதனை ஒரு பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள்"

"பாலியல் வன்புணர்வு என்கிற வார்த்தை பணம் பறிப்பதற்குத்தான் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்"

"பொண்ணு ஆயிரம் ரூபாய் கேட்டிருப்பா. இவன் 500 ரூபாய்தான் குடுத்துருப்பான்... உடனே அதுக்காக அவன் பாலியல் வன்புணர்வு செஞ்சிட்டான்னு காவல் நிலையத்துல வந்து புகார் கொடுத்துடுவா அந்த பொண்ணு"

"காசு கொடுக்கலைன்னா கற்பழிப்புன்னு வந்து புகார் கொடுக்கிறது... இதே வேலை இவங்களுக்கு... எல்லாமே காசுக்காகத்தான்..."

"நல்லவங்கல்லாம் வெளியே வந்து புகார் கொடுக்குறதுக்கு ரொம்ப யோசிப்பாங்க, அவமானமா நினைப்பாங்க... அதனால இந்த மாதிரி புகாரெல்லாம் கொடுக்குறவங்க நல்லவங்களா இருக்க வாய்ப்பு இல்லை"

"உயர்ந்த சாதியில் எல்லாம் இது மாதிரி நடப்பதே இல்லை.. வெறும் கீழ் சாதி மக்களிடம்தான் பாலியல் வன்புணர்வு அதிகமாக நடக்கிறது"

............இத்தகைய கருத்துடையோரை நம்பித்தான் நாம் வழக்கு பதிவு செய்கிறோம்... நமது அவலநிலையினை தெரிவிக்கிறோம் :-( :-( :-(

பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்குகிற நிலைதான் இன்றைக்கும்...

http://tehelka.com/story_main52.asp?filename=Ne140412Coverstory.asp



பாதி உண்மை,இன்று பப்பென்றும் டிஸ்கோ என்றும் தண்ணி போட்டு புகை பிடித்துக்கொண்டு அலையிற பெண்கள்,படிப்பு,வேலையென்று சொல்லி கடற்கரைகளில் ஆண் நண்பருடன் அலையும் பெண்கள் ,நடிகையாக,நடனமாட,பாட என எந்த விளையும் கொடுத்து நினைத்ததை அடைய பெண்கள் இன்று தயாராக உள்ளனர்,ஆண்களுக்கும் பாலியல் பிரச்சனைகள் ,வன்புணர்வுகள் ஏற்படுகின்றன,அவற்றை யாரும் பெரிதாக எடுப்பதில்லை,சட்டத்தில் ஆண்களுக்கு பாதுகாப்புமில்லை,பெண்களை பாதுகாக்க சட்டம் இருப்பதன் காரணம் அவர்களிடம் பாதுகாக்க எதோ உண்டென்பதுதானே,மற்றும்படி ஆணும் பெண்ணும் சமமென்றால் ஆண்களுக்கும் பாதுகாப்பு கற்பு வேண்டுமல்லவா??தவறாக நடக்கும் பெண்கள் இந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நாடகம் போட்டால் அதை கண்டுபிடிக்க மருத்துவ வசதிகள் உண்டா?வளர்ந்த நாடுகளை உள்ள சட்டங்கள் நிரூபணமாக்கக்கூடிய நிலையிலேயே உருவாகின்றன,முட்டாள்தனமாக அவற்றை அமூலாக்கும் அரசுகளுக்கு அவற்றை நிரூபிக்க வழிவகைகளைப் பற்றிய சிந்தனையே இல்லை.எனவே குற்றமற்றவர்களும் சட்ட ஓட்டைகளால் தண்டிக்கப்படுகின்றனர்.ஆண்களை பழிவாங்கும் பெண்களுக்கும் எதிரியை பழிவாங்கும் ஆண்களுக்கும் இது நல்ல உதவியே!!

No comments:

Post a Comment