தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, April 7, 2012

சுவையான கோதுமை அல்வா!


கோதுமை அல்வா மிகவும் சுவையாக இருக்கும் அதே நேரத்தில் செய்வதும் மிக எளிது செய்து பாருங்கள், உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்

சம்பா கோதுமை – 4 கப்
சர்க்கரை - 7 கப்
நெய் – 4 கப் ( உங்கள் தேவைக்கு)
ஜிலேபி பவுடர் – சிறிது
ஏலக்காய் - 6
முந்திரி – 10 கிராம்
திராட்சை – 10 கிராம்
பாதாம் – 10 கிராம்
தண்ணீர் – 1/2 கப்
பால் - 1/4 கப்

செய்முறை

godumaii-halwa

· முதலில் கோதுமையை ஒரு ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

· பிறகு கோதுமையை நன்கு கழுவி ஆட்டுக்கல்லில் ( கிரைண்டர் ) ஆட்டி பால் எடுத்து வைக்கவும்.

· ஒரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சேர்த்து பாகு காய்ச்சவும். ( இரண்டு விரல்கலால் தொடும் போது கம்பிப்பதம் வர வேண்டும் )

· பாகு காய்ந்த்தும் அதில் கோதுமைப் பாலை ஊற்றியதும் பாலையும் ஊற்றி அல்வா பதம் வரும் வரை கிளறுங்கள்.

· நன்கு கெட்டியானவுடன் அதில் கலருக்காக ஜிலேபி பவுடர் சேர்த்த சிறிது நேரத்தில் நெய்யை சேர்த்து கிளறுங்கள்.

· அதன் பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாதாம் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

· ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி பரிமாறலாம்.
சுவையான கோதுமை அல்வா

No comments:

Post a Comment