தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஈழ வம்சம் 14


ஈழ வம்சம்

14 ,,)பாரதத்தில் பயிற்சி பெற்ற ஈழ தேசத்து எல்லாளனும் திக்கஜனும் 

ஈழவம்ச வரலாற்றில், வந்தாரை வாழ வைத்த திரு நாட்டில்! வந்து குடி ஏறி கலந்தவர்கள் வரலாற்றில் வாழ்வாங்கு வாழ்ந்து வந்த பூர்வீக மன்னர்களை வஞ்சகத்த்தால் வீழ்த்தி அரசை கைப்பற்றினால் பூர்வீக வம்சத்தில் பிறந்த பிள்ளை அவர்களை சும்மாவா விடுவான் ,,என்பதே எல்லோரது விடை தேட முயலும் வினாவும்,,

எல்லாளன் ,தந்தையை தனியே விட்டு வந்ததை எண்ணி எண்ணி தாயாருடன் கோபத்தில் வாக்கு வாதத்தில் ஈடு பட்டான் ,அம்மா என் சுயநலத்தை எண்ணி நான் வெட்கப்படுகின்றேன் பத்து வயது பாலகன் நான் என்று நீங்கள் எண்ணி இருந்தாலும் நான் சகல போர் கலையும் கற்றே இருந்தேன் ,அரச குடும்பத்தில் பிறந்து தந்தையை போர்க்களத்தில் விட்டு விட்டு எந்த வீர புருஷர்களும் சுயநலத்தோடு போர்களத்தை விட்டு கோழைகள் போல் ஓடி ஒழித்ததாக வரலாறு இல்லை .அதை உங்கள் பிள்ளையை செய்ய வைத்து ஈழ தேசத்தை அவமானப்படுத்தி விட்டீர்களே ,அரசனாய் பிறந்தவன் போர்க்களத்தில் வெல்வதோ வீழ்வதோ தான் வீரம் ,நான் போர்களத்தை விட்டு ஓடி வந்தவன் நான் உண்மையில் ஒரு கோழை,அதுவும் தந்தையை எதிரி தாக்கும் பொழுது தப்பி ஓடி வந்த கோழை என தன் உள்ளத்து உணர்வுகளை கொட்டி தாயுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தான்.,

மகனே எல்லாளா உன் தந்தையின் கட்டளை ,அனுராதபுர மாமன்னரின் கட்டளை ,உன்னையும் என்னையும் தங்கையையும் ஈழவூருக்கு கொண்டு போய் சேர்க்கும் படி அதையே தளபதிகள் கடும் சிரமத்தில் மத்தியில் செய்து முடித்தார்கள் ,உன் அப்பா உன்னை காப்பாற்றியதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. அவர் பிள்ளை என்ற சுயநலத்தில் செய்ய வில்லை. என்பதை இந்த உலகமே ஒரு நாள் உணரும். .உன்னை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே எங்களையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார் .மகனே உன் தோள் மீது ஈழ தேசத்தின் முழுமையான பொறுப்பும் இந்த சிறு வயதில் வந்து சேரும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை ஆனால் அதுவே நடந்துவிட்டது .மகனே நீ என் பிள்ளை என்பதை விட இந்த நாட்டின் அரசன் .உனக்காக நிறைய கடமைகள் காத்து இருக்கின்றது. நம் எதிரிகள் உன் உயிரையும் உன் மச்சான் திக்கஜன் உயிரையும் பறிப்பதற்கு மாறு வேடங்களில் ஈழ வூருக்குள்ளும் நுழைந்து விட்டார்கள் என்று கேள்வி படுகின்றேன் .உன் தந்தையால் பாதுகாக்கபட்ட இளவரசனை நான் பாதுகாக்கவேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கின்றேன். நான் சொல்வதை கேள் குழந்தாய். என் அக்கா மகன் உன் அண்ணன் இளம் திரையனும் அவனது தந்தையும் சோழநாட்டை ஆள்கின்றார்கள் அவர்களிடம் உன்னையும் திக்கஜனையும் அனுப்பிவைப்பதாக செய்தி அனுப்பிவிட்டேன் .தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை நீ உணர்வாய் ஆனாலும் தாய் சொல்லை தட்டமாட்டாய் என நான் உணர்கின்றேன் எனவே என் ஆசை மகனே நான் சொல்வதை கேட்டு நீயும் திக்கஜனும் சோழநாடு சென்று கல்வியும் சகல போர் பயிற்சிகளும் உன் அண்ணனிடம் பெற்று ,ஈழ நாடு வந்து மீண்டும் நாம் இழந்த மண்ணை மீட்டு நம் மக்களுக்கு நல்ல ஆட்சி புரியவேண்டும் என்று மன்றாடி கேட்பதோடு இது அரசியாரில் கட்டளையும் என்றார் ,,உன் மாமாவும் படை தளபதியும் ஆன கந்தவுடைவேள் உங்கள் பயண ஏற்பாட்டை செய்வார் .அவர் சொற்படி கேட்டு சென்று வாருங்கள் ,நீங்கள் வந்ததும் எதிரிகள் படையை வென்று ஈழதேசத்தை மீட்போம் .அப்பாவின் உயிரை பறித்து அவர் தலையை பார்வைக்கு வைத்த அந்த கோழைகளை ஓட ஓட விரட்டுவோம் ,சென்று வா மகனே சென்றுவா என்று துளிர்த்த கண்ணீரை துடைத்தவாறு அவர் வீர மகனை வழி அனுப்பி வைத்தார் ,,,

கனிந்த கொவ்வை பழம் போல் சிவந்த எல்லாளன் கண்களில் இருந்தும் சில துளிகள் சிந்தியது .அம்மா ,,தந்தையை பிரிந்த நான் உன்னையும் தங்கையையும் பிரிந்து வாழ்வதா ,,இருந்தாலும் தாயின் கட்டளையை சிர மேற்கொண்டவர்கள் தரணியில் உயர்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன் .உங்கள் கட்டளையை நிறைவேற்ற சித்தமாய் இருக்கின்றேன் மகா ராணி! என்று கூறி தாயை வணங்கிவிட்டு .விடை பெற்று கந்தவுடை வேளோடும் ,வீர வல்லியனுடனும் திக்கஜனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான் எல்லாளன் ,,குதிரைகளின் வேகத்தை விட அவனது மனதின் வேகம் அதிகமாகவே இருந்தது .சொந்த நாட்டில் இருந்து ஓடி போகின்றேனே என்று உள்ளம் குமுறினாலும் உறங்காது அவன் உணர்வுகளை கோபம் உயர்த்திக்கொண்டு இருந்தாலும் தாயின் தத்துவோ உபதேசம் .அவனுக்கு எதிர்காலத்தின் தேவையை உணர்த்தியது ..குதிரைகள் சிறிது நேரத்தில் திரை கடலில் படகு ஓடும் தேவன் குடிசையின் முன் வந்து நின்றது .தேவன் குடிசையில் இருந்து வெளியே வந்து கந்தவுடை யாரை வணங்கி வரவேற்றான் .குதிரைகளில் இருந்து துள்ளி இறங்கிய இளவல்களை முகமலர்சியோடு பார்த்தார்.அவர்கள் தேவனுக்கு வணக்கம் தெருவித்தார்கள் .கந்தவுடையார் விபரங்களை தெரிவித்தார் வந்த காரணத்தை கேட்டறிந்த தேவன் . குமாரர்கள் இருவரையும் ஏற்றுகொண்டார் .உதவியாக வீரவல்லியனையும் அழைத்துக்கொண்டு தாமதியாமல் இரவோடு இரவாக படகை கடலில் இறக்கி தனுஷ் கோடியை நோக்கி புறப்பட்டார்கள் .தேவன் நரை வந்து வயோதிப பருவத்தை அடைந்து இருந்தாலும் நுரை பொங்கும் அலைகடலை மிகவும் லாவகமாக சந்தித்து படகு ஓட்டினார் .நீண்ட கடல் பயணத்தின் பின்னர் கோடிக்கரையின் கலங்கரை விளக்குகள் கண்ணில் தென்பட்டது .தேவன் குமாரர்களுக்கு கரை வந்து அண்மித்துவிட்டதை அறிவித்தார் .அவர்களை எதிர்பார்த்து அங்கு சோழர்குல அரச பரிவாரங்கள் காத்து நிற்பதை பார்த்தார்கள் .கோடி கரை சேர்ந்த படகில் இருந்து இவர்களை இறக்கி சோழ இளவரசனிடம் இவர்களை தேவன் ஒப்படைத்தார் ,.

தந்தைமாரை போர்க்களத்தில் இழந்து வந்த எல்லாளனும் திக்கஜனும் .உற்ற உறவினனை கண்டதும் மடை திறந்த கண்களால் விம்மி விம்மி அழுதார்கள் .இளம்திரையன் இவர்களுக்கு ஆறுதல் சொல்லி வீர வார்த்தைகளை உணர்வுகளில் ஊட்டி சோழர்குல அரசமாளிகைக்கு அழைத்து சென்றான் .நாட்கள் சில நகர்ந்தது இருந்தாலும் ஈழ நாட்டில் நடந்த கொடூர நிகழ்வுகளில் இருந்து மீளமுடியாமலே இளவல்கள் தவித்தனர் .நாடு இழந்து தந்தையர் உயிர் இழந்து தாய் தங்கையை பிரிந்து தாம் புதியதேசத்துக்கு ஏன் வந்தோம்.என்ற உள்ளுணர்வோடு இழந்த மண்ணை மீட்க போராட வேண்டிய பொறுப்பை உணர்ந்து கல்வியையும் ,சகல பயிற்சிகளையும் நீதி நெறிகளையும் இருவரும் திறம்பட கற்றார்கள்.அறநெறி தவறாமல் ஒரு நாட்டை ஆளும் அரசியல் நுணுக்கங்களையும் கற்று அறிந்தார்கள் .இவ்வாறு பத்து வருடங்கள் காலம் கடந்து சென்றது .இந்த பத்துவருடமும் தாய் தங்கையரின் நினைவலைகள் இடை இடை வந்துபோனாலும் தாய் நாட்டை மீட்கவேண்டிய தங்கள் தார்மீக பொறுப்புக்காக திக்கஜனும் எல்லாளனும் கருமமே கண்ணாய் இருந்து வீர புருஷர் ஆக உருவெடுத்தார்கள். தாயாருக்கும் தாங்கள் நாடு திரும்பப்போகும் செய்தியை அறிவித்தார்கள் .

பத்துவருடகாலமாக பொன்னம்மையாரும் சிறிய நாகச்சியாரும் தாம் பெற்ற பிள்ளைகளை பார்க்க துடியாய் துடித்தார்கள் .தேசத்தின் கடமைக்காய் பயிற்சி பெற சென்ற வீர புருஷர்களை தங்கள் சுயநலன்களுக்காக வர வளைக்க முடியாது .என்ற உறுதியான கோட்பாட்டால் தங்கள் ஆசைகளை அடக்கி வைத்து இருந்தார்கள் -இப்பொழுது வரபோகின்றார்கள் என்ற செய்தி அறிந்ததும் தாயுள்ளங்கள் பிள்ளைகளை காண தவியாய் தவித்தது .நாகதீபமே ஈழ ராஜாக்களை வரவேற்க விழாக்கோலம் பூண்டது .மிகப்பெரும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது .தங்கள் வரவை எதிர்பார்த்து நாக நாடு விழாக்கோலம் பூண்ட செய்தி எல்லாளனுக்கும் திக்கஜனுக்கும் எட்டியது .அரசியல் நகர்வுகளின் நுட்பங்களை கற்றறிந்து இருந்த அவர்களுக்கு இந்த செய்தி நற் செய்தியாக படவில்லை .ஈழத்தின் நாகதீபத்தை தவிர்ந்த ஏனைய பகுதி பாதுகாப்பாக தங்கள் கதிரமலை உத்தரபிரதேச அரசின் கீழ் இல்லை என்பதை நன்றாகவே அறிவார்கள் உத்தரபிரதேசத்துக்குள்ளும் நாக தீபத்தின் ஏனைய பகுதிக்குள்ளும் அசேலன் ஒற்றர்கள் மாறுவேடங்களில் இருப்பது இவர்கள் அறிந்தே இருந்தார்கள் ,தாங்கள் வருவது தாய்மாருக்கு தெரிய படுத்தியது தவறு என்று உணர்ந்தார்கள் .தவறு செய்தபின் உணர்ந்தென்ன இலாபம் மாற்று வழியை கடைப்பிடிக்க இருவரும் உறுதி எடுத்தார்கள் ,

ஈழ இளவரசர்கள் நாடு திரும்பும் செய்தி காற்றை விட வேகமாய் பரவியதால் அசேலன் காதுகளுக்கும் எட்டியது .அசேலன் அவர்களை தரை இறங்கும் முன்னமே அழித்துவிடும் செயல்பாட்டில் இறங்கினான் .இந்திய பெரும் கடலில் பாண்டியர்களையும் ஈழத்தின் நாகதீபத்தின் அதாவது பூநகரிக்கு மேற்பட்ட பகுதியில் கரையோர பகுதியில் தனது மறைவாக ஆயுதம் தாங்கிய ஒற்றர் படையையும் காவல் வைத்தான் .ஈழ தேசத்துக்கு வரும் முன்னே ஆபத்து எல்லாளனுக்கும் திக்கஜனுக்கும்காத்திருந்தது . இருந்தாலும் அவர்களது பாலியல் நண்பன் நந்தசாரதி அனுராத புர அரசன் அசேலன் நகர்வுகளை அணு அணுவாய் உற்று ஒற்று பார்த்துகொண்டு இருந்தான் .அவன் எல்லாளனுக்கும் திக்கஜனுக்கும் உடனுக்கு உடன் இங்குள்ள நிலைமைகளை அறிவித்துக்கொண்டு இருந்தான் .யார் எது சொன்னாலும் எல்லாளன் தான் எடுக்கும் முடிவில் திடமானவன். தந்தைபோல் தன் வீரத்தோள் பலத்தையும் வீரவாள் பலத்தையும் மிகவும் நம்பியே நடப்பவன் .சோழ நாட்டில் இருந்து சிறிது படையோடு போகும் படி அண்ணன் இளம்திரையன் அறிவுரை கூறவும் .ஏற்க மறுத்தவன் .அம்மாவின் ஆணையில் கந்தவுடை யாரும் மகா கொத்தனும் ஈழவூரில் நல்லதொரு படையுடன் தயாராக இருக்கின்றார்கள் நாங்கள் இருவரும் போனதும் அவர்களோடு இணைத்து அசேலன் படையோடு போர் இட்டு அவர்களை துவம்சம் செய்து வெல்வோம் .இது உறுதி அண்ணா என்று கூறியபடி விடை பெற்று திக்கஜனோடு எல்லாளன் ,தன் தாய் மண்ணை நோக்கி கோடிக்கரையில் இருந்து புறப்படுகின்றான் ,,,,,,,,,,,,,,,,,,,அலைகடலின் நீரோட்டத்தில் படகு போடும் எதிர் நீச்சலில் கதை நகர்வின் நிகழ்வுகளில் நீரோட்டத்தில் நானும் உங்களை அடுத்த பகுதிக்கு அழைத்து செல்கின்றேன் ,,,,,,,,

சிவ மேனகை
சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட தொண்டமான் இளம்திரையன் யார் என்று ஏற்கனவே வளைவாணன் காலப்பகுதி வரலாற்றில் எழுதி இருந்தேன் ,,,மீண்டும் ஞாபகபடுத்துகின்றேன் ,,வளைவாணன் மூத்த மகள் பீலியவளைக்கும் சோழ இளவரசன் சோழின் நெடும் கிள்ளிக்கும்,,,,,பிறந்த பிள்ளையே இளம்திரையன் ,இவனை வளை வாணன் தந்தையிடம் முதல் முதலில் சோழ நாடு அனுப்பிய பொழுதுதான் மூன்றாவது மிகப்பெரிய கடல்கோள் (சுனாமி )ஏற்பட்டது ,அந்தவேளையில் கப்பல் கவிண்டு கடலில் தத்தளித்து கழுத்து பகுதியில் ஒரு கொடியில் சுற்றிய நிலையில் குற்றுயிராய் கரை ஒதுங்கிய இடமே தொண்டைமானாறு ,,,,,,,,என்று பிற்காலத்தில் பெயர் பெற்றது ,,,,,,இளம்திரையனும் தொண்டமான் இளம்திரையன் என பெயர் பெற்றான் ,,,,




நேற்றைய கம்பன் ,வில்லி புத்தூரர் கற்பனையை எம் தமிழர்களும் ,,,மகாநாம தேரர் கற்பனையை சிங்களவரும் ,,வரலாறு என்றே படித்து வாழ்ந்து வருகின்றார்கள் ,,,நான் அந்த நோக்கத்துக்காக எழுதவில்லை இதில் உள்ள மூலக்கருத்தின் முதுகெலும்பான விடயங்களை பிரித்து எடுத்து பகுப்பாய்வு செய்யுங்கள் ,,,,,,,மூலக்கருத்துக்கள் ஏற்கனவே பல பண்டிதர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் ஆக எழுதிவைத்த விடயங்களே ,,,,,,,


நீங்க சொல்வது சரியே,ஆயினும் அலங்காரங்கள்,காலமாற்றங்கள் சேரும்போது உண்மைச்சம்பவங்கள் கூட மிகைப்படுத்தப்பட்டு நம்பமுடியாமல் போய்விடுகிறது.உதாரணம் ராமகதை ,வால்மீகியிடம் ஆச்சிரமத்தில் அடைக்கலம் பெற்ற பெண்ணின் துயரக்கதை பக்தி,கடவுள் என்ற பெயரில் நாசமாயிற்று.குமரி கண்டத்தின் உண்மை வரலாறு இன்று ஆராச்சியில் நிரூபணமாகி கண்ணன்,மகாபாரதம் உண்மையாகிறது.ஆனால் முன்னைய மிகைப்படுத்தல்கள் அதை பொய்யென்றே மக்களை நம்பவைத்தன,தெலுங்கர் தமிழரை புறம்தள்ள இக்கதைகளை பொய்யாக்கினரே!!தமிழ் அன்னையாக தெலுங்கு அவள் மகளாக உதித்தாள்.ஆனால் தெலுங்கரோ பாட்டியை காட்டுமிராண்டி என்றபடி அவள் வீட்டில் இலவசமாக சாப்பிட்டு வீட்டையே அஆண்டனர்,ஆள்கின்றனர்.காட்டுமிராண்டி வந்தாரை வாழ வைக்க வந்தேறிப் பேரர்கள் கொள்ளையடித்தபடி பாட்டியையும் தாய் மாமன்களையும் காட்ட்டுமிராண்டி என்கையில் சில பிள்ளைகளும் தங்கள் மருமக்களுக்காக கட்சி வளர்கின்றனர்.தங்கள் அன்னையை தூற்றுகின்றனர்.இன்னும் ஆங்கிலம் என்ற பெண்ணை மணந்து அவளுக்கே தொண்டாற்று கின்றனர்,அன்னையின் சகோதரியாம் சமஸ்கிருதத்தை விரட்டி விரட்டி அடித்து விட்டு மனைவியின் தலையணை மந்திரத்தில் அன்னையை வயோதிபர் மடத்துக்கு அனுப்பி விட்டு நீயா நானாவில் அன்னையால் என்ன பயன் என்றனர்.இதெல்லாம் கம்பன் போன்றோரின் வம்பால் வரலாற்று நாயகர்கள் கடவுளாய் ஆனதன் விளைவுதானே,ஆகவே அலங்காரமற்ற உண்மை எங்கள் உண்மைகளை உலகுக்கு உணர்த்தட்டுமே!!இயற்கை அழகுதானே நிலைக்கும்,செயற்கையால் செலவும் தீமையும்தானே மிச்சம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக