சமயம் - ஒழுக்கம் - யோகம் - ஆன்மீக வாழ்க்கை, சமய வாழ்க்கை, ஒழுக்கத்தை அதன் ஒரு பாகமாகக் கொண்ட சாதாரண வாழ்க்கை ஒவ்வொன்றும் வெவ்வேறானவை; நாம் எதை விரும்புகிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும், மூன்றையும் ஒன்றாகக் குழப்பக் கூடாது. சாதாரண வாழ்க்கை சராசரி மனித உணர்வின் வாழ்க்கை, அது தன்னுடைய உண்மையான ஆன்மாவிலிருந்தும் இறைவனிடமிருந்தும் பிரிந்துள்ளது; மனம், பிராணன், உடல் ஆகியவற்றின் சாதாரண பழக்கங்களால் நடத்தப்படுகிறது. அவை அஞ்ஞானத்தின் விதிகளாகும். சமய வாழ்க்கை என்பது அதே அஞ்ஞான மனித உணர்வின் இயக்கம் பூமியைவிட்டு விலகி இறைவனை நோக்கித் திரும்புதல் அல்லது திரும்ப முயலுதல் ஆகும், ஆனால் இன்னும் ஞானமில்லாமல் புவி உணர்வின் கட்டுகளிலிருந்து விடுபட்டு ஆனந்தமான சுவர்க்கம் போன்ற ஒன்றுக்கு வழி கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் ஏதோவொரு சமயப் பிரிவின் அதிகார தோரணையிலான கோட்பாடுகளைப் பின்பற்றிப்போகும். சமய வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கைக்கு முதல்படியாக இருக்கக்கூடும், ஆனால் பெரும்பாலும் அது சடங்காசாரங்களிலும் கண்மூடிக் கருத்துக்களிலும் எவ்வித பலனுமின்றி உழன்றுகொண்டிருப்பதாகவே முடியும். மாறாக, ஆன்மீக வாழ்க்கை நேரடியாக ஓர் உணர்வு மாற்றத்திலிருந்தும், கடவுளிலிருந்தும் தனது சொந்த ஆத்மாவிலிருந்தும் பிரிந்துள்ள அஞ்ஞான சாதாரண உணர்விலிருந்து ஓர் உயர் உணர்வுக்கு மாறுவதிலிருந்து தோன்றுகிறது. அந்த உயர் உணர்வில் ஒருவன் தன்னுடைய உண்மையான ஆத்மாவைக் காண்கிறான், முதலில் இறைவனுடன் நேரடியான உயிருள்ள தொடர்புகொள்கிறான், பிறகு அவனுடன் ஐக்கியமடைகிறான். ஆன்மீக சாதகன் நாடுவது இது ஒன்றைத்தான். மற்ற எதுவும் அவனுக்கு முக்கியமல்ல.* ஒழுக்கம் சாதாரண வாழ்க்கையைச் சேர்ந்தது. அது மனத்தினால் வகுத்துக் கொள்ளப்பட்ட சில விதிகளின்படி நடத்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சி அல்லது மனத்தினால் வகுத்துக் கொண்ட ஒரு இலட்சியத்தின்படி தன்னுடைய குணத்தை அமைத்துக் கொள்ளும் முயற்சி. ஆன்மீக வாழ்க்கை மனத்திற்கு அப்பால் செல்கிறது. அது ஆத்மாவின் ஆழ்ந்து உணர்வினுட் சென்று ஆத்மாவின் உண்மையிலிருந்து செயல்படுகிறது. அற வாழ்க்கைப்பற்றியும், இறைவனை அடைவது பற்றியும் கேட்கப்படும் கேள்விக்குப் பதில், வாழ்க்கையின் நோக்கங்கள் நிறைவேறுதல் என்பதற்குக் கொடுக்கப்படும் பொருளைப் பொறுத்திருக்கும். ஆன்மீக உணர்வினைப் பெறுதல் அந்த நிறைவேற்றத்தின் ஒருபாகமாக இருந்தால் வெறும் நல்லொழுக்கத்தினால் மட்டும் அதைப் பெற்றுவிட முடியாது. அரசியலுக்கும், ஆன்மீக வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆன்மீக வாழக்கை வாழும் ஒருவன் தன்னுடைய நாட்டிற்காக ஏதாவது செய்கிறான் என்றால் அவன் இறைவனுடைய இச்சையை நிறைவேற்றவும், இறைவனால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையின் ஒரு பாகமாகவும் அதைச் செய்கிறான், வேறு எந்த சாதாரண மனித நோக்கத்துடனும் அல்ல. அவன் எந்தக் காரியத்தையும் சாதாரண மனிதர்களைச் செயலுக்குத் தூண்டும் மன அல்லது பிராண நோக்கங்களுடன் செய்வதில்லை. அவன் ஆத்மாவின் உண்மையின்படியும் உள்ளிருந்து வரும் ஆணையின்படியுமே செயல்படுவான், அந்த ஆணை எங்கிருந்து வருகிறது என்பது அவனுக்குத் தெரியும். * உன்னுடைய இதயத்திலும் ஆன்மாவிலும் ஆன்மீக மாற்றத்திற்கு ஆர்வம் இருந்தால் நீ வழியையும் வழிகாட்டியையும் கண்டுபிடிப்பாய். மனத்தின் நாட்டமும், மனத்தில் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பது சித் பொருளின் கதவுகளைத் திறப்பதற்குப் போதா. * இறைவனை அவனிடமிருந்து நாம் பெறக்கூடியவற்றிற்காக மட்டும் நாடுவது சரியான மனப்பான்மை ஆகாது என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் இவற்றிற்காக அவனை நாடவேக் கூடாது என்று தடை விதித்துவிட்டால் உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் அவனை நாடவே மாட்டார்கள். ஆகவே அவர்கள் முதல் அடி எடுத்துவைக்கத் துணையாக அது அனுமதிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவர்கள் விரும்பியது கிடைக்கக் கூடும். ஆகவே தங்களுடைய தேவைகளுக்காக அவனிடம் போகப் பழகிக் கொள்வார்கள். பிறகு ஒரு நாள் திடீரென, இது அவ்வளவு சரியான முறையாகத் தெரியவில்லையே, இறைவனை அணுக இதைவிட நல்ல வழிகள் இருக்கின்றன, இதைவிட நல்ல மனப்பான்மை இருக்கிறது என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றக்கூடும். அவர்கள் விரும்புவது கிடைக்காத போதிலும் அவர்கள் இன்னும் அவனிடம் வருகிறார்கள். அவனை நம்புகிறார்கள் என்றால், அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அது அடையாளம். அதை இன்னும் ஆன்மீக வாழ்க்கைக்கு ஆயத்தமில்லாதவர்களுக்கான பாலர் பள்ளி என்று வைத்துக் கொள்ளலாம். அது ஆன்மீக வாழ்க்கை அல்ல என்பது தெரிந்ததே, அது ஒரு வகையான ஆரம்ப சமய அணுகுமுறைதான். கோருவது அன்று, கொடுப்பதே ஆன்மீக வாழ்க்கையின் விதி. சாதகன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு அல்லது ஆரோக்கியம் கெட்டிருந்தால் அதைத் திரும்பப் பெறுவதற்காக இறைவனது சக்தியின் உதவியை நாடலாம், ஆனால் அதை சாதனையின் பாகமாக, உடல் ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்றதாகவும் இறைவனது வேலைக்கு திறமையுடன் கருவியாக இருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் செய்ய வேண்டும்.
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 13 பிப்ரவரி, 2012
சமயம் - ஒழுக்கம் - யோகம்!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக