தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஈழவம்சம் 9


ஈழவம்சம் 9 
ஆரம்பத்தில் அன்னியர்கள் ஈழத்துக்கு ஏன் வந்தார்கள் ? உலகில் முதல் முதலில் சிறந்த நாகரீகத்தோடு ,சிறந்த கட்டமைப்போடு நாணயத்தையும் வெளியிட்டு வணிக பரிவர்த்தனையில் ஈடுபடுத்திய ஒரு தேசத்தில் யாருக்கு தான் ஆசை இருக்காது ,,மற்றவர்களை சுரண்டி வாழும் பழக்கத்தை ஐரோப்பியரும் அமெரிக்கர்களும் முதன் முதலில் புராதன பாண்டியர்களை பார்த்துதான் கற்று கொண்டார்கள் .சோழர்களும் பாண்டியர்களை பார்த்து ஆரம்பத்தில் இந்த வழியிலேயே செயல்பட்டார்கள் ,இந்த கருத்துக்கள் வாசகர்களுக்கு கசப்பான விடயங்களாய் இருந்தாலும் என்னால் சுயநலம் சார்ந்து சுயசிந்தனையை மாற்றி எழுத முடியாது ,அந்தவகையில் ஈழத்துக்கு வந்தேறு குடிகளாக வந்தவர்கள் ஈழத்தின் பெறுமதி வாய்ந்த சொத்துக்களை சூறை ஆடி தங்கள் தாய் நிலங்களுக்கு கொண்டு சென்றார்கள் .இதற்காகவே பல்வேறு போரிலும் ஈடுபட்டார்கள் ,இந்த விடயங்களை எமது மூதாதைகள் பண்டிதர்கள் அறிவியல் ஆய்வாளர்கள் வரலாற்று ஆசிரியர்கள் ஏன் வெளிப்படையாக எழுதவில்லை என்பது என்மனதில் முள்ளாக குற்றி கொண்டே இருக்கின்றது அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் .வரும் சில குறிப்புக்கள், அவர்களும் தமிழர்கள் என்பதால் மறைத்தோம் என்ற பொருள் சில இடங்களில் உணரப்படுகின்றது ... ஆரம்பத்தில் இன்றைய ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த விஜயன் குவேனியினதும் உறவினர்களினதும் சொத்துக்களை சூறை ஆடி பாண்டிய மன்னனுக்கு முத்துக்கள் நவரத்தினங்கள் தங்க ஆபரணங்கள் யானை தந்தங்கள் என்பவற்றை பரிசாக கொடுத்து அனுப்பி பாண்டிய பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து தருமாறு செய்கின்றான் இதையும் தமிழ் அறிஞர்கள் வெளிப்படையாக கூறவில்லை ,சிங்கள மகாவம்ச தேரர் திருட்டை ஒரு பொருட்டாக நினைக்காததால் சொல்லி விட்டார் என்று நினைக்கின்றேன் .பின்னர் ஒவ்வொரு முறையும் விஜயன் பாண்டியர்களிடம் படை உதவி கேட்ட போதும் ஈழத்து செல்வம் பல்வேறு கட்டங்களில் பாண்டி நாடு சென்றது .பாண்டியர்களுக்கு அந்தவேளையில் தான் நிதர்சனமாக புரிந்தது ஈழத்தில் செல்வம் அதிகம் இருப்பது அதனால் தான் தொடர்சியாக படை எடுத்து தோல்வி கண்ட பாண்டியர்கள் ,விஜயன் இறந்து முப்பது வருடங்களின் பின்னர் மாதோட்டத்தின் உபத்தீச நகரை கைப்பற்றினார்கள் .கைப்பற்றி வந்த முதல் பாண்டிய அரசனே பண்டு வாசன் ,, கடல் கடந்து வந்து நாட்டை மாதோட்ட அரசை கைப்பற்றிய பண்டு வாசன் மாதோட்டத்தில் இருந்த பொருள்களை சூறை ஆடி பாண்டி நாட்டுக்கு அனுப்பி வைத்தான் .மேலும் பெரும் தொகையில் செல்வத்தை சேர்க்க வேண்டுமானால் இங்குள்ள ஏனைய பகுதி சிற்றரசர்களுடன் போராடி வென்று அவர்கள் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் .தனது பலம் பலவீனத்தை நன்கு உணர்ந்தவன் .ஈழத்தின் நாகர்களின் மிக பெரிய இராச்சியமாக இருந்த வட பகுதி கதிரை மலை அதாவது கந்தரோடை அரசுடன் போரிட விரும்பவில்லை ,. அவர்களுடனான உறவுகளையும் முற்றாக தவிர்த்தான் .வஞ்சகமாக நல்லுறவுகளை புரிந்தால் தென் பகுதி அரசர்களை ஏமாற்றலாம் என்று நினைத்து பல்வேறு திருமண பந்தங்களை குறு நில அரசர்களிடையே ஏற்படுத்தினான் .அந்த வேளையில் விஜயனின் தோழனின் மகன் திக்காமினி . அனுராத புரத்தில் இவனது தாய்வழி இயக்கர் குலத்து சிறு அரசை ஆண்டு வந்தான்.இவன் பாண்டியர்கள் மாதோட்டத்தில் வந்து இறங்குவதற்கு பல்வேறு உதவிகள் செய்ததாலும் அவர்களோடு மிகவும் தோழமையோடு இருந்ததாலும் ,பண்டு வாசன் தன் மகள் உன் மாத சித்தரையை இவனுக்கு திருமணம் செய்து வைத்தான் .இவர்களுக்கு பிறந்த மகனே பண்டு காபயன் இவனே அனுராத புர இரசியத்தை உருவாக்கியதாக புனை கதை மகாவம்சம் சொல்கின்றது .உண்மையில் காடுகளை அழித்து அனுராத புரத்தை சிறுய அரசாக உருவாக்கியவர்கள் விஜயனால் பாதிக்க பட்ட இயக்கர் குல .குறுநில அரசர்கள் . உறவுகளாய் இருந்தாலும் நாம் பக்கத்து வீட்டு காரனை பார்த்து பொறாமை படுவதை !பக்கத்து நாட்டுக்காரன் வந்து எம்மை பார்த்து பொறாமை பட்டு எம்மோடு சண்டை பிடித்ததில் இருந்தே நாம் கற்று கொண்டோம் .இதுவே காலப்போக்கில் வந்தேறு குடிகளோடு ஒரே நாட்டில் சேர்ந்து வாழமுடியாமல் ஒரு வேற்று இனத்தை தோற்றுவித்தது . அனுராத புரத்தில் இருந்து பாண்டியர்கள் யானைகளை பிடித்து இந்தியாவுக்கு அனுப்பியதை விரும்பாத பண்டுகாபயன் மாமா மாருடன் போரிட்டு வென்று மாமன் அபயன் ஆண்ட உபத்திஸ்ஸ நகரையும் அனுராத புரத்தோடு இணைத்து கொண்டான் .அன்றில் இருந்து பாண்டியர்கள் சொத்துக்களை செல்வங்களை திருடி கொண்டு செல்வதை எதிர்த்து முடியுமானவரை தடை செய்தான் .இதனால் இவர்களுக்கு இடையில் பிரிவுகள் சண்டைகள் பெருமளவில் ஏற்பட்டது .பண்டு காபயனின் தந்தையின் தாய்வழி இயக்கர்குல குறு நில அரசர்கள் இவனுக்கு பலவழிகளில் உதவினார்கள் .இதை சாதகமாய் பயன்படுத்திய பண்டுகாபயன் தனது வம்சத்தினரே முழு நாட்டையும் ஆழ வேண்டும் என்ற கொள்கையில் செயல்பட தொடங்கினான் .பாண்டியர்கள் சொத்தை திருட வந்த இடத்தில் அவர்களோடு உறவாகிய இவன் நாட்டை திருட முயற்சிக்கின்றான் இது தான் இவர்களுக்குள் உள்ள வித்தியாசம் .. பூர்வீக தமிழனின் நாட்டை கைப்பற்ற பலம் உள்ளவன் காலில் விழுந்தாலே முடியும் என்பதை பண்டு காபயன் நன்றாக உணர்ந்தான்.பாண்டியர்கள் தன் உறவினர்களாக இருந்தாலும் அவர்கள் ஈழத்தின் சொத்துக்களை சூறை ஆடுவதே முக்கியமாக கருதுவதால் அவர்களின் படை உதவியை முழுமையாக நம்பாமல் மிகவும் சாதுரியமான முறையில் பூர்வீக தமிழர்களிடம் இருந்து நாட்டை அபகரிப்பதற்கு அந்தகாலத்தில் வட இந்தியாவில் பேரரசாக இருந்த மௌரிய பேரரசன் சந்திர குப்தனின் உதவியை நாடினான் .இதையே இன்றைய சிங்கள அரசும் இந்தியாவின் உதவியை மட்டும் நம்பி தமிழர்களுடன் போரிடாமல் சீனா ஈரான் மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியை பெற்று கொண்டது .இந்தியாவின் உதவியையே வெளி உலகிற்கு தெரியப்படுத்தியது .மற்ற நாடுகளின் உதவிகளை மறைத்தது ..அதுபோலவே சந்திர குப்தனின் படை உதவி பெற்று சில குறுநிலஅரசர்களை வென்று பாண்டுகாபயன் தனது இராச்சியத்தை விரிவாக்கியதையும் இடையில் சமணம் பண்டுகாபயனால் ஈழத்தில் பரவியதையும் அனைவரும் மறைத்தார்கள் சமணம்! ஈழத்தில் பண்டுகாபயன் அனுராத புர இராச்சியத்தோடு இணைந்த சில குறு நில அரசுகளை கைப்பற்ற உதவிய சத்திர குப்தனின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவர் துறவி ஆகிய சமண சமயத்தை தானும் தழுவி மக்களையும் அந்த சமயத்தை கடைப்பிடிக்குமாறு பணித்தான் ,500 சமண சமய துறவிகளுக்கு அனுராத புரத்தில் இருப்பிடங்கள் அமைத்து கொடுத்து உதவி செய்தான் ,சோதியன் ,கிரி ,கும்பண்டன், என்பவர்கள் இந்த துறவிகளில் முதன்மையானவர்கள் .இவர்களில் கிரி என்பவரும் அவரது சீடர்களும் தங்குவதற்காக பண்டு கா அபயனால் கட்டப்பட்டதே அபயகிரி துறவிகள் மடம்.இந்த மடம் கட்டப்பட்ட இடத்துக்கு அருகில் மிக பெரிய சிவன் கோவில் இருந்ததாகவும் வரலாறு சொல்கின்றது மக்களை சமண சமயத்தை கடைப்பிடிக்க வற்புறுத்தி அந்த சிவன் கோவிலை இடித்ததாகவும் வரலாறுகள் உண்டு .இதனை சிங்கள எழுத்தாளர்கள் கூட உறுதி படுத்தி உள்ளார்கள் .ஆனால் தமிழ் எழுத்தாளர்களும் சமணம் ஈழத்தில் நிலவியது என்பதை மறைக்க பரசமயிகளுக்கு பண்டு காபயன் இருப்பிடங்கள் கொடுத்து உதவினான் என்பதற்கு அராபியாவில் இருந்து வந்த முஸ்லீம்களுக்கு உதவினான் என்று வரலாற்றை மாற்றி எழுதினார்கள் முஸ்லீம்கள் ஆரம்பத்தில் குதிரைகளை ஈழத்தில் உள்ள அரசர்களுக்கு விற்று யானைகளை தமது நாட்டுக்கு வாங்கி சென்றார்கள் . அரேபிய முஸ்லீம்கள் வணிகர்கள் வருகை விஜயன் காலத்துக்கு முன்னமே இருந்து இருக்கலாம் ஆனால் அவர்கள் அந்தவேளையில் ஈழத்தில் இருப்பதற்கு தங்கிவிடவில்லை . ஈழத்தில் பண்டுகாபயனால் போற்றப்பட்டு சமணசமயம். பிற்காலத்தில் பௌத்தத்தை மதம் என்று மௌரிய மன்னன் சந்திர குப்தனின் பேரன் அசோகனால் ஏற்றுகொண்ட வேளையில் மௌரிய தேசத்திலும் ஈழத்திலும் பௌத்தத்தின் தாக்கம் மக்களிடையே ஏற்பட்டதில் சமணம் அழிவு பாதையில் போனது .சமண மத துறவிகளின் மடமாய் இருந்த அபயகிரி துறவிகள் மடமும் புத்த துறவிகள் மடமானது .புத்த பிக்குகள் தங்கும் மடத்தோடு சேர்த்து பிற்காலத்தில் அரசர்களின் உதவியோடு அபயகிரி விகாரையையும் கட்டுவித்து கொண்டார்கள் ,, எனவே அன்னியர்கள் ஆரம்பத்திலும் சரி பிற்காலத்திலும் சரி ஈழத்துக்கு செல்வங்களை சூறை ஆடவும் மதங்களை பரப்பவுமே வந்தார்கள் என்பது நிரூபணமாகின்றது .அவ்வாறு வந்தவர்களே நாட்டையும் முழுமையாக திருடி ஆளுகைக்குள் கொண்டுவந்து விட்டார்கள் என்பதையும் மனவருத்தத்துடன் தெருவிக்கின்றேன் பண்டுகாபயன் அனுராத புரத்தை ஆண்டகாலப்பகுதியில் கதிரை மலை என்ற கந்தரோடை இராச்சியத்தை நாக வாணன் என்ற பூர்வீக தமிழ் மன்னன் ஆண்டு வந்தான் பலம் பொருந்திய நாக அரசர்கள் தங்களது சுயபராக்கிரமங்களை கொண்டே வம்சம்தோறும் ஆண்டுவந்தார்கள் .எந்த ஒரு அந்நிய சக்திகளிடமும் அவர்கள் அடிபணியவும் இல்லை உதவி பெறவும் இல்லை. பண்டுகாபயனும் இயக்கர்குலத்தின் உறவு முறையில் இருந்ததினால் ஆரம்பத்தில் அவனை அவர்கள் எதிர்கவில்லை காலப்போக்கில் பாண்டியரின் வருகை கலப்பு சூழ்சிகள் மௌரிய படையினரின் வருகை சமண சமயத்தின் வருகை என்பன இவர்களுக்கு இடையே விரிசல்களை தோற்றுவித்தது பண்டு காபயனின் விசித்திரமான போக்கு இவர்களால் ஏற்று கொள்ளமுடியாமல் இருந்தது இதனால் பண்டுகாபயனோடு முரண்பட்டு நாக வாணன் அனுராத புரத்தின் மீது படை எடுத்து அரசை கைபற்றி தமது அரசோடு இணைத்து கதிரைமலையை தலைநகராய் கொண்டு நாக அரசர்கள் ஈழத்தின் பெரும்பகுதியை ஆண்டார்கள் ...இதனை மகாவம்சம் இடையில் பதினேழு வருடம் அரசு இல்லாமல் இருந்தது என்று மட்டும் சொல்கின்றது ஏன் என்றால் அந்த பதினேழு வரிடமும் அனுராத புரத்தையும்ஆண்டது தமிழன் என்று சொல்ல தேரருக்கு விருப்பம் இல்லை ..இருந்தாலும் தேவனை நம்பிய தீசன் என்பவனால் மீண்டும் அனுராத புர தமிழ் அரசு நிலைமாறியது பற்றியும் ,புனிதமான பௌத்தத்தை மதமாக்கி மனித மனங்களை ரணமாக்கியது பற்றியும் வளரும் தொடரில் தொடரும் நிகழ்வுகளின் வரிசையில் பார்ப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக