பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் பல்வேறு வகையான நோய்கள் குணமாகின்றன.
- சிறு துண்டு பூண்டை எடுத்து காதில் வைத்து கொண்டால் காது வலி, உடல் வலி, தலைவலி, காய்ச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
- கடும் இருமல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பூண்டு, தேன் கலந்து அதை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை அகலும்.
- பூண்டு நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து, கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினமும் காலையில் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் நல்லது.
- பூண்டானது நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு பற்களை சாப்பிடலாம்.
- படர்தாமரை, கால் அரிப்பு போன்றவற்றுக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். பாதிப்பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய்யை தடவினால் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.
- பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. கீல்வாத வலியிலிருந்து விடுபட தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட வேண்டும்.
- பூண்டில் இருக்கும் வலி நிவாரணி தன்மைகள் பல் வலியை போக்கும் திறன் கொண்டதாகும். பல்வலி சமயத்தில் பூண்டு துண்டு அல்லது பூண்டு எண்ணெயை வலி இருக்கும் இடத்தில் வைத்தால் உடனடி பலன் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக