- மென்று முழுங்காமல் அவசர அவசரமக உணவை முழுங்குவதால் உங்கள் ஜீரணத் தன்மை பாதிக்கும். இதனால் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் உண்டாகும். அதனால்தான் அந்த காலத்தில் சொன்னார்கள். நொறுங்கத் தின்னால் நூறு வயது.
- முடிந்த அளவு ஹோட்டல், கையேந்தி பவன், துரித உணவகம் போன்ற இடங்களில் சாப்பிடுவதை தவிருங்கள். அவற்றில் உபயோகப்படுத்தும் எண்ணெய்கள் மோசமான கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.
- நேரமில்லை என்று சாக்கு சொல்லாமல், புத்தியை தீட்டி, வீட்டிலேயே நேரத்தை குறைக்கும் எளிய உணவுகளை செய்ய பழகிக் கொள்ளுங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்தை இருமடங்காக்கும்.
- இரவு 7 மணி ரெண்டுங்கெட்டான் நேரம். பெரும்பாலோனோருக்கு அந்த சமயத்தில்தான் பசி எடுக்கும். இரவு டின்னரையும் முடிக்க மனதில்லாமல் ஸ்நேக்ஸ் மீது நாட்டம் போகும்.
- ஆனால் அது உடல் பருமனை அதிகப்படுத்த மிக முக்கியமான காரணமாகும். ஆகவே அந்த சமயத்தில் பழங்கள் அல்லது சூப் சாப்பிட்டு 8 மணி வரை பொறுமை காத்தால் உங்களுக்கு வெற்றி.
- மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது கோபத்தில் இருக்கும்போது சாப்பிடுவது மிகவும் தவறாகும். இது உடல் பருமனை மட்டுமல்லாது ஜீரண மண்டலத்தையும் பாதித்து பிரச்சனைகளை உண்டு பண்ணும்.
- தெரிந்தோ தெரியாமலோ சமைக்கும் பழக்கம் கூட உடல் பருமனுக்கு காரணமாகிவிடுகிறது. ஒரே எண்ணெயை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, ஆவியில் வேக வைக்காமல் ருசிக்காக பொரித்து சாப்பிடுவது, காய்கறிகளுக்கு பதிலாக கார்போ உணவுகளை அதிகம் சேர்ப்பது, ஒரே சத்துக்கள் கொண்ட உணவுகளையே திரும்ப திரும்ப உண்ணுவது போன்றவைகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும்.
http://news.lankasri.com/lifestyle/03/126287?ref=lankasritop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக