தமிழனில் இருந்தே மற்றவர் தோன்றியதை மறுக்கும் தமிழர் ஆதாரங்கள்!!
உண்மையான இந்துக்களான வட இந்தியர்களுக்கு முழுவதிலுமே தெரியாத முருகன் சிவனின் வாரிசு என்ற நமது நிலை சரியா ........அப்படி என்றால் அவர் சிவனின் சின்ன வீடிற்கு பிறந்த ஒருவராகவே கொள்ள முடியும் ....தவிர இப்படியான ஏற்கவே முடியாத கதைகளை அடிப்படையாக கொண்டதே மதங்கள் .அனுமாரின் வியர்வை துளியை விழுங்கிய மீன் கருத்தரித்து ........ அழுக்கால் உருவாக்க பட்ட பிள்ளையார் ...என பல .இப்படி தவறான கதைகளை மட்டுமே கொண்ட இந்து மதம் தான் எமது மதமா ??? தமிழர் இடத்தில இப்போ இருக்கிற மற்றைய மதங்கள் சில காலம் முதல் தோன்றியவை அவையும் தவறானவை தான் .......இந்த அளவில் இவை நிற்க ...தலைப்பினுள் நுழைவோம்.
தமிழர் தலைவராக வீரனாக ஆரிய இனத்தை எதிர்த்து போர் புரிந்த முருகனின் ஆறு படை வீடுகள் ஆறில் அனைத்தும் தமிழகத்தில் அமைந்து உள்ளன .ஐந்து தற்காப்பு சமரில் வெற்றி பெற உதவ கூடிய செங்குத்தான மலை பகுதியில் அமைந்து இருக்கிறது .மலை பகுதியில் பாதுகாப்பாக வாழ ,தளம் அமைக்க ,மற்றும் அப்பகுதியில் செல்வாக்கை நிலை நிறுத்த மலை பகுதியில் வாழும் குறவர் இன பெண்ணை (வள்ளி ) மணம் புரிந்தார் என்றும் கொள்ளலாம் . தெய்வானை விடயத்தை என் மனமும் ஏற்க மறுக்கிறது (தெய்வ ஆனையை மனிதன் மணம் புரிவது என்பதும் ஆரியத்தின் இழிவான கதை தான் என்றே எண்ண தோன்றுகிறது ).போகர் (அகத்தியர் பாட்டுகளில் இவரை எல்லாமுமானவன் போகர் என்று சொல்லபட்டு உள்ளது .....அதாவது தமிழரின் பண்டைய சாதிப்புகளின் மூலமாக இருந்த அகத்தியரின் ஆசானாகவோ அவரது சாதனைகளின் மூலமாகவோ இருந்து இருக்க வேண்டும் ) போன்றவர்களின் தமிழ் பாட்டுக்களில் கூட முருகன் ஒரு போர் வீரராகவே (தமிழரின் இராணுவ தலைவராக ) சொல்ல பட்டு உள்ளது .அடுத்ததா நாம் அனைவரும் அறிந்த "முருகன் " "சூரன் " யுத்தம் பற்றி பாப்போம் .
சூரன் பற்றி பார்க்க முன் , அசுரர் பற்றியும் சுரர் (இந்த பெயர் தான் "சூரன் " ஆக மருவியதா கொள்ளலாம் )பற்றியும் பாப்போம் .சுரம் என்பது மதியை மயக்க கூடியது என்பது சங்கீத விதி .மதியை மயக்கிய நிலையில் வைத்து இருக்க கூடிய மது (சுர பானம் என்றும் சொல்லலாம் ),மாது போன்ற விடயங்களில் தமது நிலையை வைத்து இருந்தவர்கள் தான் சுரர் (அதனால் தான் ஆரிய கூத்து(மதுவுடனோ ,.மாதுவுடனோ ) ஆடினாலும் காரியத்தில் கண்ணா இருக்க வேண்டும் என்ற பழமொழி வந்தது ).அந்த நிலையில் அன்று இருக்காதவர்கள் அசுரர் (தமிழர் ....அசுரர்கள் பற்றி சொல்ல படும் வாக்கியங்களை வைத்தே சொல்லலாம் ).ஆனால் ஆரியரின் பக்க பார்வையை மட்டும் வைத்து பார்த்து நாம் அசுரரை கெட்டவர்களாகவே எண்ணி கொள்கிறோம் என்பது வேதனை .இந்த சுர, அசுர(ஆரிய ,தமிழ் ) யுத்தத்தில் வென்ற இருவரையும் (மதுரை மீனாட்சி ,முருகன் )கூட சிவனின் மகனாகவும் , துணைவியாகவும் மாற்றி திரித்து விட்டார்கள் (இதற்கு உதாரணமாக மீனாட்சி கோவில் உள்ளே இருக்கும் இந்த வாசகத்தை கொள்ளலாம் "தேவர்களை வெற்றி புரிந்து இமயம் முதல் குமரி வரை ஆட்சி செய்தால் மீனாட்சி " உண்மையில் இவர் ஒரு தமிழ் அரசி ......இன்று இவர் வாழ்ந்த மாளிகை (அதுதான் அவர் நினைவா கட்ட பட்ட கோவில் ) வெளியில் இரண்டாவது வீதியாக அமைத்து சிவனை இருத்தி எம்மை ஏமாற்றுகிறது ஆரியம் .
இப்படியாக வெற்றி வாகை சூடிய முருகன் ஒரு நேரம் தோல்வி அடைந்து தூத்துக்குடி பக்கமாக பின் வாங்கி கடல் பக்கமாக திருசெந்தூரில் படை தளம் அமைத்ததாக கொள்ளலாம் .......பின்னர் அவர் என்ன செய்தார் ........இதுதான் நான் எடுத்து கொண்ட பகுதி .......அங்கும் நிலை கொள்ள முடியாது பின் வாங்க வேண்டி ஏற்பட்டு இருந்தால் முருகன் எங்கு சென்று இருப்பார் .......இங்கே தான் "ஈழம் " தொடர்பில் வருகிறது .....யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும் தீவுகளில் ஓன்று "வேலணை "(வேலன் அணைந்த இடம் ) ,இங்கே பத்து வருடம் முன்பு செய்ய பட்ட அகழ்வாராய்ச்சியில் ஒரு மிக பழமையான ,மிகவும் சிறப்பான முறையில் பாதுகாக்க பட்ட ,சிறப்பாக வடிவமைக்க பட்ட ,ஒரு மிக பெரிய தலைவனுக்காக வடிவமைக்க பட்டதா எடுக்க கூடிய ஒரு இறந்தவர்களை அடக்கம் செய்யும் முதுமளைதாளி எடுக்க பட்டது . இது வேலனினுடையாதாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது .......அந்த அளவு பழமையானது .அடுத்தது தீவு பகுதியில் குறிப்பிட்ட இந்த பகுதியை சுற்றி காண படும் ஐயனார் கோவில்கள் அடுத்த சான்று ....ஐயனார்கள் யார் என்பது ஓரளவு தமிழர் வரலாற்றை ஆராய்ந்த சிலருக்கே தெரியும் ........முருகன் படையணியில் இருந்த தளபதிகள் அதாவது ஒவ்வொரு ஐயனார் கோவில்களும் முருகனின் ஒரு படை தலைமையகம் .தீவு பகுதியில் இந்த ஐயனார் கோவில்கள் மிக அதிகம் ....இவை பிற்காலத்தில் கட்டபட்டு இருந்தால் வரலாறு இருந்து இருக்கும் ஆனால் இவற்றிற்கு வரலாறு இல்லை அந்த அளவு வரலாற்றுக்கு முந்தியவை ......தீவு பகுதியில் இருக்கும் மற்றைய ஆரிய திணிப்பினால் பின் நாட்களில் உருவாக்க பட்டா கோவில்களிட்கு வரலாறு உண்டு .......இன்னுமொரு ஆதாரம் தீவு பகுதி முழுவதிலும் பெரும்பான்மையா வாழும் வாழும் மக்கள் தமது பூர்வீகமா ஒரு "வர்க்க " பெயரை தான் கொண்டு உள்ளனர் ஆனால் அந்த வர்க்கம் இப்போ யாழில் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக