தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 மே, 2013

அதிகரித்து வரும் மின்வெட்டை சமாளிக்க இன்வெர்டர் கருவிகளை வாங்குகிறீர்களா?


அதிகரித்து வரும் மின்வெட்டை சமாளிக்க இன்வெர்டர் கருவிகளை வாங்குகிறீர்களா?

கொஞ்சம் இதை படிங்க…..
ஒரு வீட்டுக்கு சுமார் 500 வாட் சக்தி கொண்ட இன்வெர்டரை பொருத்த சுமார் 12,000 முதல் 15,000 வரை செலவாகிறது. ஆனால் இயற்கை எரிவாயு மூலம் அதே 500 வாட் மின்சாரத்தை தயாரிக்க 12,000 முதல் 16,000 தான் செலவாகிறது. இன்வெர்டர் பொருத்துவதால் நாட்டின் மின் தேவை அதிகரித்து கூடுதல் நேரம் மின் வெட்டு அமலாகிறது. ஆனால் ஒரு முறை இயற்கை எரிவாயு மின் உற்பத்தி திட்டத்தை உங்கள் இல்லத்தில் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டில் சுமார் 8 மணி நேரம் தொடர் மின் விநியோகம் நிச்சயமாக கிடைக்கும். உங்கள் மின்சார கட்டணம் குறையும். அது மட்டுமல்ல, சமையல் சிலிண்டருக்கு பதிலாக இயற்கை எரிவாயுவையே பயன்படுத்தி பெரும் அளவு தொகையை சேமிக்கலாம். இயற்கை கழிவுகளில் இருந்து பெறப்படும் மீத்தேன் எரிவாயு நீள நிறத்தில் புகையில்லாமல் எரியக்கூடியது. மின் உற்பத்திக்கு பிறகு சேமித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை இயற்கை உறமாக உங்கள் தோட்டங்களில் பயன்படுத்தலாம்.

மஹாராஸ்டிர மாநிலத்தில் இதுவரை பல வீடுகளில் இத்திட்டம் செயல்பட தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல மற்றொரு செய்தி கேளுங்கள், பஞ்சாபில் மாடு வைத்திருப்போருக்கு அடித்தது யோகம். ஒரு துண்டு மாட்டு வரட்டி ரூ 1.50 க்கு விற்பனையாகிறதாம்.

தமிழகத்தில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
1. இயற்கை கழிவுகள் (அதாவது, காய்கறிகள், மனிதக் கழிவுகள் மற்றும் மக்க கூடிய கழிவுகள்) மூலம் பெருமளவு மின்சாரம் கிடைக்கிறது
2. குப்பைகளை கொட்டுவது குறைந்து சுகாதாரத்தை காக்க உதவுகிறது
3. சமையல் எரிவாயுவாக பயன்படுத்த முடிகிறது. அதாவது மானியத்துடனான LPG பயன்படுத்தும் போது 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, ஒரு நாளைக்கு சுமார் 30 ரூ செலவாகிறது. ஆனால் இயற்கை எரிவாயு பயன்படுத்தினால் ரூ 2 முதல் 5 தான் செலவாகிறது.
4. மின்சார கட்டணம் குறைகிறது.
5. தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது
6. மின்சார உற்பத்திக்கு பின் கழிவுகள் இயற்கை உறமாக பயன்படுத்தப்படுகிறது.

500 வாட் மின் உற்பத்திக்கு தேவையான பொருட்கள்
1. 300 – 400 லிட்டர் பிளாஸ்டிக் தொட்டி (சுமார் 3000 ரூ)
2. 500 வாட் ஜெனரேட்டர் (சுமார் 9000 ரூ)
இவை இரண்டே பொதுமானது. இது தவிற இதர செலவுகள் இருக்கும். அதாவது, பைப்புகள், மின் இணைப்பு மட்டும் கூலி ஆகியவை அடங்கும்.
இது குறித்த செய்திகளை இணையதளத்தில் தேடவும். எண்ணற்ற நிறுவனங்கள் இதை செய்து தருகின்றன…. நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக