தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, May 29, 2013

அணு மூலக்கூறு உள்பகுதியை முதன் முறையாக போட்டோ எடுத்த விஞ்ஞானி!

முதன் முறையாக அணு மூலக்கூறின் உள்பகுதியை விஞ்ஞானிகள் போட்டோ எடுத்துள்ளனர்.
அணு மூலக்கூறின் உள் பகுதியின் வடிவமைப்பை இதுவரை போட்டோ எடுக்க முடியவில்லை. ஏனெனில் அணு சோதனையின்போது அவற்றின் துகள்கள் உடனடியாக அழிந்துவிடும்.

ஆனால், சமீபத்தில் நடந்த சோதனையின்போது நெதர்லாந்து விஞ்ஞானிகள் லேசர் கருவிகள் மற்றும் மைக்ராஸ்கோப் உதவியுடன் ஹைட்ரஜன் துகள்களை பார்த்தனர். இதற்கு முன்பு இதுபோன்ற துகள்களை பார்த்ததில்லை.

எனவே, அவற்றின் உள் அமைப்பை உடனடியாக போட்டோ எடுத்தனர். இதற்காக அவர்கள் 20 ஆயிரம் மடங்கு பெரிதாக காட்டும் விசேஷ லென்சையும், மிகப் பெரிதாக காட்டும் மைக்ராஸ்கோப்பையும் பயன்படுத்தினார்கள்.

அணு மூலக்கூறின் உள் அமைப்பை போட்டோ எடுத்ததன் மூலம் எலெக்ட்ரானிக்சின் புதிய அமைப்பை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment