தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 மே, 2013

மீன்


மீன்


கர்ப்பக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.
இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.

ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, `15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர்.


மீனில் கொழப்பு இல்லை, அதிகமாக புரோட்டின் சத்து உள்ளது. இதில் ஒமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் வேறு எந்த உணவிலும் இல்லை உடலில் எந்த நோயும் வரமால் தடுக்க இந்த ஆசிட் மிகவும் உதவுகிறது.

இதயநோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விகிதத்தை 30 சதவீதம் வரை குறைக்கலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உட்கொண்டால் உடலுக்கு சத்து போதிய விகிதம் கிடைக்கும்.

ஆஸ்துமா நோய் வரவே வராது. அதுவும் குழந்தையில் இருந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்பே இல்லை.

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயன் அளிக்கிறது.

புற்று நோய வராமல் தடுப்பதில் பெரும் பங்களிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக