அட அப்படியா..?
சத்தியமா...இது இதனை நாளா எனக்கு தெரியாதுங்க.....
குதிரை வீரன் !
குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விஷயத்தில் ஒரு மரபு இருக்கிறது.
குதிரையின் நான்கு கால்களும் கீழே ஊன்றி இருந்தால், அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தான் என்று பொருள்.
குதிரையின் ஒரு கால் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் காயம் அடைந்து, பிறகு இறந்தவன் என்று அர்த்தம்.
முன்னங்கால்கள் இரண்டும் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் வீர மரணம் அடைந்தவன் என்று அர்த்தம்.
இனி குதிரை சிலைகளைப் பார்த்தால் இதையும் கவனியுங்க!
- சுட்டி விகடனில் இருந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக