தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, May 29, 2013

சிந்து சமவெளி நாகரிகம்


சிந்து சமவெளி நாகரிகம்


"கல் தோண்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்த குடி" என்ற பெருமை தமிழ் மக்களுக்கு உண்டு.
தமிழர் இனம் உலகில் மிகத் தொன்மை வாய்ந்ததாகும்.
இந்திய நாட்டின் தென்பகுதியில் "நாவலந் தீவு" என்னும் பெரும் நிலப்பரப்பு இருந்தது. அப்பகுதியில் தோண்றிய மக்களே தமிழ் மக்கள் ஆவர். இப்பகுதி பின்னாளில் ஐரோப்பிய மக்களால் "லெமூரியா" என்றும் "கொந்துவானா" என்றும் அழைக்கப்பட்டது.

தென்பகுதியிலிருந்து தமிழர்கள் படிப்படியாக இந்தியாவின் வடமேற்குப் பகுதியான சிந்து சமவெளி வரை பரவலாயினர்.
சிந்து சமவெளி நாகரீகம் என்பதெல்லாம் தமிழர் நாகரீகமே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் தமிழர்கள் மிகத் திருந்திய நாகரீகம் பெற்றவர்களாக இருந்தனர்.
முதல் தமிழ்சங்கம் தோண்றிய காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி தற்போதுள்ள குமரிமுனைக்கு பல நூறு கிலோ மீட்டர் தெற்கே விரிந்து கிடந்தது.
அப்போதிருந்த மதுரை, தென்மதுரை என்று அழைக்கப்பட்டது.

அத்தென் மதுரையில் தான் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டிருந்தது. பல்லாண்டுகளுக்குப் பின் கடல் கொந்தளிப்பால் தென்மதுரை அழிந்து போனது.
அதனால் கடைச்சங்கம் கபாடாபுரம் என்னும் இடத்தில் நிறுவப்பட்டது. பின்னர் கபாடாபுரத்தையும் கடல் விழுங்கியபோது தற்போதுள்ள மதுரையில் கடைச்சங்கம் நிறுவப்பட்டது.

தலைச்சங்கத்தின் இலக்கியங்கள் அனைத்தும் கடல்கோளால் அழிந்தன. தலைச்சங்கக் காலத்தில் உருவான பாடல்கள் 4440 ஆண்டுகள் ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றுள் பரிபாடலும், முதுநாரையும், முதுகுறுகும், களரியா விரையும் அடங்கும். இடைச் சங்கக்காலப் பாடல்களான கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் ஆகியன அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கிழார் ஆகியோரால் இயற்றப்பட்டு 3700 ஆண்டுகள் ஆவதாக கருதப்படுகிறது.

நல்லந்துவனார், மதுரை மருதனின் நாகனார், நக்கீரனார் முதலான பலர் எழுதிய நூற்றைம்பது கலி, எழுது பரிபா, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன 1850 ஆண்டுகளுக்கு முந்தியது என அறிய முடிகிறது.

இந்நூல்களுள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ்க்கணக்கு ஆகியனவும் அடங்கும். பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் களவழி நாற்பது தவிர்த்த மற்ற நூல்களுள் எல்லாம் அகத்தைச் சார்ந்த அறிவை வளர்க்கக் கூடியனவாக அமைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுவன திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மனிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்றனவாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அகத்துறையாகிய யோகக் கலையில் தேர்ந்திருந்தனர். அவர்களின் வாழ்க்கையில் அரசியல், பொருளாதாரம், சுகாதாரம், சமூகவியல் அனைத்தும் நன்கு வளர்ந்திருந்தன.

சிந்துவெளி நாகரீகத்தின் போது வாழ்ந்தவர்கள் தமிழர் வழி வந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். அவர்கள் யோகக் கலையில் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்கான அடையாளங்கள் அகழ்வாய்விலிருந்து அண்மைக் காலங்களில் கண்டு அறியப்பட்டுள்ளன.

6000 ஆண்டுகளுக்கு முன்பு மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் வாழ்ந்த தமிழர் வழிவந்த மக்கள், தியான நிலையில் அமர்ந்திருக்கும் தோற்றமுடைய கடவுளை வழிபட்டனர் என்பதற்கான படிவம் கிடைக்கப் பெற்றதிலிருந்து, அக்காலத்திலேயே தமிழர்கள் யோகக் கலையில் தேர்ந்திருந்தனர் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

திருவள்ளுவரின் கருத்துக்களை ஒட்டிய சிந்தனையாளர்களாகத் தமிழகத்தில் தோன் றிவர்களே சித்தர் பெருமக்கள் ஆவர். அவர்களுடைய சிந்தனை அனைத்தும் யோக நெறியில் வலியுறுத்தப்படும் அகத் துறையையே பெரிதும் சார்ந்திருக்கின்றன.

-எண்ண சிதறல்கள் 

No comments:

Post a Comment