தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 மே, 2013

சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலை!!


சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று. வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சித்த அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும். ஆசான் அகத்தியர் உடம்பிலுள்ள வர்மங்களை பற்றிக் கூறி இருக்கிறார்.

* தலைப்பகுதி வர்மங்கள் = 37
* நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
* உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
* முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
* கைப்பகுதி வர்மங்கள் = 17
* கால் பகுதி வர்மங்கள் = 32


இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?

* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது. முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.

* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.

* வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.

* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.

நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.

இதையே விநாயகர் அகவலில்

"ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே"

நமது முதுகுத்தண்டு (தூண்) வடத்தின் உள்ளே இடகலை, பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.(இதுவே மூன்று மண்டலத்து முட்டிய தூணின்). நமது மூச்சு ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 1மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன. அந்த 21,600 மூச்சுக்களில் துரியம், ஆக்கினை, விசுத்திச் சக்கரங்கள் முறையே 6000 மூச்சுக்கள் வீதம் 18,000 எடுத்துக் கொள்கின்றன. அடுத்துள்ள அனாகதம், மணிப்பூரகம், சுவாதிட்டானம் இம் மூன்று சக்கரங்களும் 1000 வீதம் 3000 மூச்சுக்களை எடுத்துக் கொள்கின்றன.மீதம் உள்ள 600 மூச்சுக்களை மூலாதாரம் எடுத்துக் கொள்கின்றது. இவ்வாறு மூச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இயங்கும் சக்கரங்கள், இவை இயங்கும் அந்தந்தப் பகுதிகளை பார்த்துக் கொள்வதுடன், அந்த இடத்தின் உள் உறுப்புக்களையும் பார்த்துக் கொள்கின்றன. இவையே நம் உயிர் இயங்கத் தேவையான சக்தியினை மூச்சின் மூலம் பெற்று உடலெங்கும் 72000 நாடி நரம்புகளின் வாயிலாக பாய்ந்து உடலை இயக்குகின்றன. இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன. படுவர்மம் என்றால் உயிர் பட்டுப்(செத்துப்) போகச் செய்யும் வர்மங்கள் என்று பொருள்.


இவை தமிழ்ச்சித்த மருத்துவத்தின் "அக்கு பஞ்சர்" போன்ற சிகிச்சைப் புள்ளிகள் ஆகும். ஆசான் அகத்தீசர் குறிப்பிடும் உடலின் முக்கிய வர்மப்புள்ளிகளின் விரிவாக்கம்.


தலைப்பகுதி வர்மங்கள் (37)
1.திலர்த வர்மம்
2.கண்ணாடி கால வர்மம்
3.மூர்த்தி கால வர்மம்
4.அந்தம் வர்மம்
5.தும்மிக் கால வர்மம்
6.பின் சுவாதி வர்மம்
7.கும்பிடு கால வர்மம்
8.நட்சத்திர வர்மம்
9.பால வர்மம்
10.மேல் கரடி வர்மம்
11.முன் சுவாதி வர்மம்
12.நெம வர்மம்
13.மந்திர கால வர்மம்
14.பின் வட்டிக் கால வர்மம்
15.காம்பூதி கால வர்மம்
16.உள்நாக்கு கால வர்மம்
17.ஓட்டு வர்மம்
18.சென்னி வர்மம்
19.பொய்கைக் கால வர்மம்
20.அலவாடி வர்மம்
21.மூக்கடைக்கி கால வர்மம்
22.கும்பேரிக் கால வர்மம்
23.நாசிக் கால வர்மம்
24.வெட்டு வர்மம்
25.அண்ணாங்கு கால வர்மம்
26.உறக்க கால வர்மம்
27.கொக்கி வர்மம்
28.சங்குதிரி கால வர்மம்
29.செவிக்குத்தி கால வர்மம்
30.கொம்பு வர்மம்
31.சுமைக்கால வர்மம்
32.தலைப்பாகை வர்மம்
33.பூட்டெல்லு வர்மம்
34.மூர்த்தி அடக்க வர்மம்
35.பிடரி கால வர்மம்
36.பொச்சை வர்மம்
37.சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)
1.தள்ளல் நடுக்குழி வர்மம்
2.திவளைக் கால வர்மம்
3.கைபுச மூன்றாவது வரி வர்மம்
4.சுழி ஆடி வர்மம்
5.அடப்பக்கால வர்மம்
6.முண்டெல்லு வர்மம்
7.பெரிய அத்தி சுருக்கி வர்மம்
8.சிறிய அத்தி சுருக்கி வர்மம்
9.ஆனந்த வாசு கால வர்மம்
10.கதிர் வர்மம்
11.கதிர் காம வர்மம்
12.கூம்பு வர்மம்
13.அனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)
1.உதிர்க் கால வர்மம்
2.பள்ளை வர்மம்
3.மூத்திர கால வர்மம்
4.குத்து வர்மம்
5.நேர் வர்மம்
6.உறுமி கால வர்மம்
7.ஆமென்ற வர்மம்
8.தண்டு வர்மம்
9.இலிங்க வர்மம்
10.ஆண்ட கால வர்மம்
11.தாலிக வர்மம்
12.கல்லடைக் கால வர்மம்
13.காக்கடை கால வர்மம்
14.புச வர்மம்
15.விதனுமான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)
1.மேல் சுருக்கி வர்மம்
2.கைக்குழி காந்தாரி வர்மம்
3.மேல்க்கைப் பூட்டு வர்மம்
4.கைச் சிப்பு எலும்பு வர்மம்
5.பூணூல் கால வர்மம்
6.வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
7.கச்சை வர்மம்
8.கூச்ச பிரம்ம வர்மம்
9.சங்கு திரி கால வர்மம்
10.வலம்புரி இடம்புரி வர்மம்
11.மேல் சுருக்கு வர்மம்
12.மேலாக கால வர்மம்
13.கீழாக கால வர்மம்
14.தட்டேல்லு வர்மம்
15.மேலஅண்ட வர்மம்
16.நாயிருப்பு வர்மம்
17.கீழ் அண்ட வர்மம்
18.குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)
1.வலம்புரி இடம்புரி வர்மம்
2.தல்லை அடக்க வர்மம்
3.துதிக்கை வர்மம்
4.தட்சணக் கால வர்மம்
5.சுழுக்கு வர்மம்
6.மூட்டு வர்மம்
7.மொளியின் வர்மம்
8.கைக்குசத்திட வர்மம்
9.உள்ளங்கை வெள்ளை வர்மம்
10.தொங்கு சதை வர்மம்
11.மணி பந்த வர்மம்
12.திண்டோதரி வர்மம்
13.நடுக்கவளி வர்மம்
14.சுண்டு விரல் கவளி வர்மம்
15.மேல் மணிக்கட்டு வர்மம்
16.விட மணி பந்த வர்மம்
17.கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)
1.முதிர கால வர்மம்
2.பத்தக்களை வர்மம்
3.ஆமைக்கால வர்மம்
4.பக்க வர்மம்
5.குழச்சி முடிச்சி வர்மம்
6.சிறுவிரல் கவளி வர்மம்
7.சிரட்டை வர்மம்
8.கால் மூட்டு வர்மம்
9.காலக் கண்ணு வர்மம்
10.நாய்த் தலை வர்மம்
11.குதிரை முக வர்மம்
12.கும்பேறி வர்மம்
13.கண்ணு வர்மம்
14.கோணச்சன்னி வர்மம்
15.கால வர்மம்
16.தட வர்மம்
17.கண் புகழ் வர்மம்
18.அனகால வர்மம்
19.பூமிக் கால வர்மம்
20.இடுப்பு வர்மம்
21.கிழிமேக வர்மம்
22.இழிப் பிழை வர்மம்
23.அணி வர்மம்
24.கோச்சு வர்மம்
25.முடக்கு வர்மம்
26.குளிர்ச்சை வர்மம்
27.குசத்திட வர்மம்
28.உப்புக் குத்தி வர்மம்
29.பாதச் சக்கர வர்மம்
30.கீழ் சுழி வர்மம்
31.பதக்கல வர்மம்
32.முண்டக வர்மம்

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக