இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஆண்களால் ஏமாற்றப்பட்டுக் குழந்தை பெற்றுக் கொள்ளும்படி நேர்ந்த மணமாகாத பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக விடுதி தொடங்கி வைத்தவர். அனாதைப் பெண்களுக்கான விடுதியையும் நடத்தியவர்.
நவீன இந்தியாவின் முதல் பெண் நூல் தொகுப்பாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் விளங்கியவர்.
வைதீகர்களால் கட்டமைக்கப்பட்ட வரலாற்றை அடியோடு நிராகரிக்கின்ற “ மாற்று வரலாற்று நூல்களை “ எழுதியவர். “ மாற்று கவிதை மரபின் “ முதல் முயற்சியாக விளங்கக் கூடிய கவிதைகளையும் எழுதியவர்.
விதவைப் பெண்களின் தலையை மொட்டை அடிப்பதற்கு எதிரான போராட்டம் , ஆதிக்க சாதியினரை எதிர்த்து நேசமிக்க இணைகளுக்கு சாதிமறுப்பு திருமணம் செய்து வைத்தல் , தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிதல், அதனால் தொற்று நோயினால் தாக்கப்பட்டு உயிர் இழந்தார்.
தான் உயிரினும் மேலாக நேசித்த தன் கணவர் மரணமடைந்த போது அவர் சிதைக்கு தானே தீ மூட்டி அனைத்து சடங்குகளையும் சாம்பலாக்கியவர்
சாவித்திரி பாய் பூலே.
இதெல்லாம் அவங்க 1850-90 களிலே பண்ணிட்டாங்க.
-சாத்தப்பன் நா
பெண்ணை மென்மையான உள்ளம் கொண்டவர் என்று நம்பி ஏமாந்த ஆண்கள் சிதையை எரிக்க அவர்களை விடுவதில்லை,சுடலைக்கு அவர்களை அனுமதிப்பதில்லை!ஆனால் பெண் காளி என்பது அதற்கு முதலே நிறுவப்பட்டது!இதில் ஆச்சரியமொன்றுமில்லை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக