தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 மே, 2013

விக்கிரக ஆராதனை விக்கினத்தை போக்காது ???




விக்கிரக ஆராதனை விக்கினத்தை போக்காது ???

ஒரு விக்ரகத்தை உருவாக்கும்போது சிற்பி கல்லை தேர்வு செய்யும்போது ஆண் கல்லா? பெண் கல்லா? என்று ஆண்கல்லை ஆண் தெய்வத்திற்கும் பெண் கல்லை பெண் தெய்வத்திற்கும் தோ்வு செய்கிறார். சிற்பம் செதுக்கும்போது இறைவனை வழிபட்டு பின்புதான் ஆரம்பிக்கிறார். அந்த விக்கிரகத்தை வழிபடுவதற்கு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு முன் நீரில், நெல்லில் போட்டு பாலாயம் செய்து அதன் பின்புதான் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதிஷ்டை செய்யும்போது அதற்கு மருந்து சாத்தப்படுகிறது. உருவமில்லாத இறைவனை அழைத்து நாம் செய்து வைத்திருக்கும் விக்ரகத்தில் எழுந்தருளுமாறு (ஆவாகனம்) வேண்டுகிறோம். அதன் பின் விக்ரகத்தின் கண் திறக்கப்படுகிறது. இறைவன் குடியேறியபின் அதுவரை கல்லாக கருதப்பட்ட விக்ரகம் இப்போது கடவுளாக கருதப்படுகிறது. அவருக்கு அபிஷேக அலங்காரம், ஆராதனை செய்யப்படுகிறது. ஆனால் இது போன்ற எந்த அடிப்படையும் இல்லாமல் ஆர்.சி கிறிஸ்தவர்கள் இயேசு, மரியாள், அந்தோணியார் சிலைகளை சிமெண்டினால் செய்து வழிபடுகிறார்கள். பிராட்டஸ்டண்ட் காரர்கள் சிலுவையை வைத்து வழிபடுகிறார்கள். பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரை, வசனங்களை சுவரில் எழுதி வைத்து வழிபடுகிறார்கள். ஏதோ இவர்களின் மெய்யான தேவனுக்கு உருவமே இல்லாமல் வணங்குவது போல் விளம்பரம் செய்கிறார்கள். நம்மைக் குறைகூறுகிறார்கள்.
விக்ரக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைந்தவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், ஆழ்வார்கள், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றோர். பிராடு தாயப்பன் போன்றவர்களுக்கு நம் முன்னோர்களைக் குறை கூற என்ன தகுதியிருக்கிறது?

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக