தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 மே, 2013

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்..


அடிக்கும் வெயிலின் தாக்கத்திற்கு மட்டும் அளவே இல்லை. இத்தகைய கடுமையான வெயிலினால், சருமம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, முடியும் தான். அதிலும் அதிகப்படியான வெயிலினால், வியர்வை அதிகரிப்பதோடு, உடல் வெப்பமும் அதிகரித்து, அதிகப்படியான வெயிலினால் முடி உடைய ஆரம்பிக்கும். மேலும் சில சமயங்களில் வியர்வை தலையில் அதிகம் தங்குவதால், தூசிகள் தலையில் தங்கி, பொடுகுத் தொல்லையை உண்டாக்கி, முடி உதிர்தலை ஆரம்பிக்கிறது. எனவே கோடையில் வெளியே செல்லும் போதும் சரி, வீட்டில் இருக்கும் போதும் முடியின் மீது அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், முடி கொட்டி, வழுக்கைத் தலையாகத் தான் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், தலை முதல் கால் வரை பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே எவ்வளவு வேலை இருந்தாலும், முடி வேண்டுமானால் ஒருசில பராமரிப்புக்களை மேற்கொள்வது அவசியமாகிறது. இப்போது கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைப்பதற்கு ஒருசில ஐடியாக்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி வாருங்கள்.

தலைக்கு குளிக்கவும் 
பலர் தினமும் தலைக்கு குளித்தால், தலையில் வறட்சி ஏற்பட்டு, முடி உதிர்ந்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் பொதுவாக வாரத்திற்கு மூன்று முறை தலைக்கு குளித்தால், தான் முடி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் கோடை என்று வந்துவிட்டால், தினமும் தலைக்கு குளிப்பது தான் சிறந்தது. இதனால் வெயிலின் அதிகப்படியான தாக்கத்தினால், வெப்பமடைந்திருக்கும் முடி குளிர்ச்சியடைவதோடு, வியர்வையின் காரணமாக ஸ்கால்ப்பில் தூசிகள் தங்காமலும் இருக்கும்.

தொப்பி 
எப்போதுமே முடியின் மீது நேரடியான சூரியவெப்பம் படும்படியாக எங்கும் செல்லக்கூடாது. இல்லாவிட்டால், வெப்பத்தினால் முடி வலுவிழந்து, உதிர்வதோடு, உடைந்துவிடும். எனவே வெளியே செல்லும் போது தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து செல்ல வேண்டும்.

குளிர்ச்சி தரும் எண்ணெய்
 ஸ்கால்ப்பை குளிர்ச்சியாக்கும் எண்ணெய்களான அஸ்வகந்தா, நெல்லிக்காய் போன்றவற்றை தலைக்கு தேய்த்து வந்தால், முடி நன்கு குளிர்ச்சியுடனும், மென்மையாகவும், இருக்கும். அதுவும் இத்தகைய எண்ணெய்களை இரவில் தேய்க்காமல், பகல் வேளையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். அது தான் நல்ல பலனைத் தரும்

வியர்வையை துடைக்கவும் 
ஸ்கால்ப்பில் வியர்வை இருந்தால், அது மயிர்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தி, முடி உதிர்தலை உண்டாக்கும். எனவே எப்போதெல்லாம் தலையில் வியர்த்தாலும், டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுத்து விட வேண்டும்.

குளிர்ச்சி தரும் ஷாம்பு 
தலைக்கு குளிக்கும் போது, தலைக்கு குளிர்ச்சியைத் தரும் ஷாம்புக்களைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, பயன்படுத்தும் ஷாம்புக்களில், உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய பொருட்களான புதினா, கற்றாழை அல்லது வெள்ளரிக்காய் அடிப்படையில் இருக்கும் ஷாம்புக்களை பயன்படுத்துவது நல்லது.

ஹேர் ட்ரையர் 
நிறைய மக்கள் முடியை காய வைப்பதற்கு, ஹேர் ட்ரையர் பயன்படுத்துவார்கள். ஆனால் அதனை பயன்படுத்தினால், அதிலிருந்து வரும் வெப்பமான காற்று, ஸ்காப்பில் அதிகப்படியான வெப்ப உணர்வை ஏற்படுத்தும். எனவே கோடையில் வெயில் இருக்க, முடியை காய வைப்பதற்கு, ஹேரை ட்ரையரைப் பயன்படுத்த வேண்டாம்.

ஹேர் மாஸ்க் 
தலைக்கு வாரத்திற்கு 3 முறை ஹேர் மாஸ்க் போடலாம். அதுவும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் தயிர், வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி ஹேர் மாஸ்க் போடுவது நல்லது.

நல்லெண்ணெய் குளியல்
 நல்லெண்ணெய் கொண்டு வாரத்திற்கு 1-2 முறை எண்ணெய் குளியல் மேற்கொண்டால், உடல் வெப்பம் நீங்குவதோடு, முடி குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.



http://www.myhearttamil.com/2013/05/ways-keep-hair-cool-summer.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக