தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 மே, 2013

நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி


நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி


திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 
திருநெல்வேலி புகைப்படங்கள் - நெல்லையப்பர் கோயில் - ராஜகோபுரம் 


சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இதுவாகும். இரண்டு கோவில்களும், 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலின் கோபுரங்களும் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். புராணங்களின்படி, சிவபெருமான் தமது தாண்டவ நடனத்தை ஆடிய பல்வேறு தலங்களில் நெல்லையும் ஒன்றாகும்.

இதனால், பரத நாட்டியம் போன்ற பழமையான நடனக்கலைகளுக்கும் இதர கலைகளுக்கும் முக்கியமான இடமாக திருநெல்வேலி கருதப்படுகிறது. இந்நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, இக்கோவிலின் உள்ளே, தாமிரத்தினால் ஆன மேடை என்னும் பொருள் படும் தாமிர அம்பலம்/தாமிர சபை அமைக்கப்பட்டு உள்ளது.

திருக்கல்யாணம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற சிறப்பான விழா நாட்களில் இக்கோவிலைத்தரிசனம் செய்வது இனிமையான அனுபவமாகும். அக்டோபர் மாதம் 15 முதல் நவம்பர் மாதம் 15 வரை அதாவது தமிழ் மாதமான ஐப்பசி திங்களில் மேலே கூறிய விழாக்கள் நடைபெறும்.

தைப்பூச திருவிழாவானது இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் மற்றொரு திருவிழாவாகும். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் இக்கோவிலை கண்டுபிடித்து வந்து சேருவதில் சுற்றுலாப்பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக