தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 மே, 2013

இன்று - மே 6 : மோதிலால் பிறந்த தினம்.


மோதிலால் நேரு... முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியில் வாழ்க்கை வாழ்ந்தவர். வீட்டில் அந்தக் காலத்திலேயே மின்சாரம், வெள்ளையரைப் போல உணவு பழக்கம், மகனை பள்ளியில் இருந்து அழைத்துவர பள்ளியின் எல்லா வாசல்களிலும் கார்கள், வீட்டில் நீச்சல்குளம், புலால் உணவு என ஏகபோக வாழ்க்கை அவருடையது . 

பத்தாயிரம் பவுண்டு - ஒரு வழக்குக்கு அவர் வாங்கிய ஃபீஸ். ஜவகர்லால் நேருவுக்காக தானும் விடுதலைப்போரில் ஈடுபட்டார். ஆனால், பல விஷயங்களைச் செய்ய முடியாமல் திணறினார் . நூல் நூற்க வேண்டும் என காந்தி சொன்னதைச் செய்யமுடியாமல் நான்கு அணா அபராதம் கட்டும் முறை இவருக்காக வந்தது.

சிறையில் மகன் மீது கொண்ட பாசத்தால் உள்ளே போனவர், வீட்டுச் சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்டார். அதைக்கொண்டு வர சொன்னார். நேரு அப்படியே சாப்பாட்டை வெளியே எறிந்து விட்டு, "அப்பா எத்தனை மக்கள் எளிய உணவு உண்டு நாட்டுக்காக போராடுகிறார்கள்" என கடிந்து, இவரை விடுதலைப்போரில் ஈடுபட வைத்தார்.

வெறுந்தரையில் பிள்ளைப் பாசத்துக்காக படுத்து, நாட்டு விடுதலைப்போரில் பங்குகொண்டார் மனிதர்.

இப்படிப்பட்ட பிள்ளையும், அப்படிப்பட்ட தந்தையும் இன்றைய அரசியலில் எங்கே தேடுவது?

இன்று - மே 6 : மோதிலால் பிறந்த தினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக