தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 ஜூலை, 2012

தன் வீட்டு நாத்தத்தை உணர முடியாத நாயி அடுத்த விட்டுக்காரன் கோவணத்தை வாசம் பாத்துச்சாம்!!!




பொது இடங்களில் மற்றும் சமுதாய தளங்களில் தங்கள் எண்ணைகளை (வக்கிரங்களை ?!!) தனிப்பட்ட விதமாக கீழ்த்தரமாக பேசுபவர் ஆகட்டும், அல்லது இவர்களை ஆதரிக்கும் நண்பர்களும் ஆகட்டும் ஒன்றை சுலபமாக மறந்து விடுகிறார்கள்.


தாத்தாவின் தாத்தா அல்லது பாட்டியின் பாட்டி பேரு கூட தெரியாத ஆட்கள் நாம் ஆனால் அடுத்தவரின் கற்புத்தன்மையை(Chasity) ,நதிமூலம் தொடங்கி ரிஷிமுலம் வரை எவ்வளவு சந்தோசமாக பேசுகிறோம்.எவ்வளவு பெரிய வடிகட்டின மோசடி இது?? தன் வீட்டு நாத்தத்தை உணர முடியாத நாயி அடுத்த விட்டுக்காரன் கோவணத்தை வாசம் பாத்துச்சாம் என்ற கிராம மொழியும் வழக்கில் உண்டு என்பதையும் நினைவில் கொள்க !

மோசமாகவும் ,மோசமான வர்தைகைளும் பேசுவது வீரமல்ல .பேசாமல் இருப்பதே வீரம்.காலம்காலமாக அறிஞர் பெருமக்கள் , சான்றோர் இந்த "கீழ்த்தரமாக அலசும்" பிரச்சனையை எவ்வாறு அணுகி இருகிறார்கள் என்று பார்ப்போம் :

563 BC ~ 483 BC:கௌதம புத்தர்
உயர்குல பிரபுக்களின் அழைப்பை விடுத்து ஒரு விலைமாதுவின் அழைப்பை உயர்வாக சொல்லி ஏற்று கொண்டார்.

2nd century BC :திருவள்ளுவர்
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
உரை:மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

7–2 BC ~ 36 : இயேசு பிரான்
எவன் எந்த ஒரு தப்பையும் பண்ண வில்லையோ அவன் இந்த வேசி மீது கல் எரியட்டும் என்றார் .

18 Feb 1836~16 Aug 1886 :ராமகிருஷ்ண பரமஹம்சர்
சொன்ன ஒரு குட்டி கதை : ஒரு ஊரில் ஒரு சாது வசித்து வந்தார் . அவர் வீ ட்டுக்கு எதிரே ஒரு வேசி வசித்தார் . அவளின் வாழ்கை முறையை பார்த்த சாது அவளிடம் போய் பெண்ணே நீ ரொம்ப பாவம் செய்கிறாய் ., நீ செய்யும் பாவத்தின் அளவை உனக்கு காட்டுகிறேன் பார் என்று சொல்லி அவளின் வீ ட்டுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளர் வரும் போது ஒரு சிறு கல்லை எடுத்து அவள் வீ ட்டின் திண்ணையில் எரிந்து வரலானார் . வருடங்கள் செல்ல அவள் வீ ட்டின் முன் கற்குவியல் சேர்ந்து விட்டது .

அதை பார்த்து வருந்திய அந்த பெண்மணியை பார்த்து அந்த சாது சொன்னார் உன் பாவங்கள் அளவு எப்படி பெருகி விட்டது பார் . சில காலம் கழிந்தது . சாதுவும் அந்த பெண்மணியும் ஒரு நாளில் மரணம் அடைந்தார்கள் .

சொர்கத்தின் வாசலில் அந்த பெண் நிற்பதை பார்த்த சாது ., நீ நரகத்திற்கு போக வேண்டியவள் ஏன் நிற்கிறாய் என்று சொன்னார் .

அதற்கு அந்த சொர்கத்தின் வாயில் காப்போன் , இல்லை சாதுவே நீங்கள் தான் நரகத்திற்கு செல்ல வேண்டும் , இந்த பெண்மணி சொர்க்கம் வர வேண்டும் என்று சொல்லவே திகைத்து போன சாது எப்படி நான் முக்காலமும் தெய்வ பூஜை செய்தேன் இவளோ சிற்றின்ப போகத்தில் திளைத்தவள் .,இது சரியல்ல என்று வாதிட்டார் .

அதற்கு அந்த வாயில் காப்போன் நீங்கள் சொல்வது முற்றியும் சரி ஆனால் மனதில் அவள் தான் செய்யும் பாவங்களை நினைத்து வருந்தி கொண்டு இருந்தாள் ஆனால் நீரோ அவள் எங்கனம் சுகித்து இருப்பால் என்று எண்ணிக்கொண்டு கல்லை எண்ணி கொண்டு எறிந்திர் . அதலில் நீர் செல்லும் நரகத்திற்கு என்று சொல்லி அந்த பெண்மணியை சொர்க்கம் பூக சொன்னானம்.

January 6, 1883 - April 10, 1931: பெருங்கவி கலீல் ஜிப்ரான்
மனிதனுக்குப் பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை. அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது

15 September 1909 – 3 February 1969:அறிஞர் அண்ணா
நீ கையை தூக்கி ஆள் காட்டி விரல் காட்டி குற்றம் சாட்டும் போது மற்ற மூன்று விரல்கள் உன்னை குற்றம் சாட்டுவதை மறந்து விடாதே என்றார் .

சான்றோர் உரை குறித்து நீங்கள் மேலும்அறிவின் தெரியப்படுத்துங்கள் . சேர்த்து கொள்கிறேன்

Do understand belittle makes us Wither!

நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி .
Note:This article is Portion of my oncoming book "பிடிப்படா 64 நிமிடங்கள்"



திரு ச வே ரா 


inuvil:உங்கள் கருத்து வரவேற்கத்தக்கதுமட்டுமல்ல,நமது ஆன்றோர் சொல்லிச்சென்றதும்தான்,நானும் குறைகூறும் வர்க்கத்தை சேர்ந்தவனே,குறைகளை கூறுவதன் நோக்கம் அவற்றை மற்றவர் அறிந்து அதிலிருந்து ஒதுங்கி இருக்கவே,குடிகாரனுக்குத்தான் தலைவலி அனுபவமாகத் தெரியும்,மற்றவர் படித்ததை மட்டுமே சொல்லுவர்.தமிழ் பண்பாடு,கலாச்சாரம் பற்றி நாம் அறிந்ததை பகிர்கிறோம்,தவறை குறிப்பிடுகிறோம்,உதாரணமாக டயானா காத்ல்த்தெய்வம் என்போருக்கு அவர் யாருக்கு காதலி என்று கேட்கிறோம்,பதில் சொல்லாமல் நாம் கீழ்த்தரமாக பேசுவதாக சொன்னால் நாளை தமிழச்சி கணவனுடன் சின்னவீடும் வைத்திருக்க ஆசைப்படுவாள்,ஆணோ கண்டதையெல்லாம் அனுபவித்து கடைசியில் கண்ட கண்ட நோய்களின் காவியாகி தன்னையும் சமூகத்தையும் அழித்திடுவான்.அதற்கு என்ன செய்வதாம்!!!,ஒதுங்கி இருந்தால் மெளனம் சம்மதம் என்றாகாதா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக