வேற்றுமை, உவமை, உம்மை, தொகை:- ( தொக்கு(மறைந்து) நிற்பது தொகை)
பெயர்ச்சொற்களில் பொருள் வேறுபாடு செய்வனவே வேற்றுமை எனப்படும். மரத்தை, மரத்தோடு என்று வழங்கும் போது, மரம் என்னும் பெயர்ச் சொல் பொருளில் பல மாறுதல்கள் அடைகிறது. அதனைச் செய்கிற ஐ, ஆல் என்பவையே வேற்றுமையாகும். இவை வேற்றுமை உருபெனவும் சொல்வர். ஒரு பொருளைப் போலவே இருக்கும் மற்றொன்றிற்கு உவமை என்கிறோம். அதுபோலவே ஒன்றிற்கு மேல் பல சொற்களைச் சேர்க்கும் போது இடையில் "உம்" சேர்க்கிறோம். அதுவே உம்மை என்றழைக்கப்படுகிறது.
வேற்றுமை - (உ-ம்) கண்ணால், கண்ணோடு
உவமை - (உ-ம்) மதிமுகம் (மதி போன்ற முகம்)
உம்மை - (உ-ம்) தமிழும், அழகும், எழிலும்
தொகை - (உ-ம்) செந்தாமரை (செம்மை + தாமரை)
அசை, சீர், அடி, எதுகை, மோனை:-
ஒரேழுத்து அல்லது ஈரெழுத்து கொண்ட சொல்லின் தொகுதிக்கு பெயர் அசை. செய்யுளில் வரும் ஒரு சொல்லே சீரெனப்படுவது. அதுபோலவே செய்யுளில் உள்ள ஒவ்வொரு வரியும் அடியெனப்படும். அடிதோறும் முதல் சொல்லின் இரண்டாமெழுத்து ஒன்றிவருவது எதுகையெனவும், சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருவது மோனையெனவும் அழைக்கப்படும்.
அசை - (உ-ம்)
"கடவுள்" - இதில் கட , வுள் .
சீர் - (உ-ம்)
குறளில் - அகர முதற்சீர், முதல இரண்டாம் சீர்
அடி - (உ-ம்)
பொன்னார் மேனியனே புலித்தோலையரைக் கசைத்து -
இது முதலடி
மின்னார் செஞ்சடைமேற் மிளிர்க்கொன்றை யணிந்தவனே! - இது இரண்டாமடி.
எதுகை- (உ-ம்)
அழகு, பழகு - இவ்விரு சொற்களில் இரண்டாம் எழுத்து ழகரம் ஒன்றி வருகிறது. இதுவே எதுகை.
மோனை - (உ-ம்)
அழகு, அன்பு - இவ்விரு சொற்களில் முதலெழுத்து அகரம் ஒன்றி வருகிறது. இதுவே மோனை.
நன்றி - அன்பன் செ. இராமலிங்கன்.
அன்பன் இராஜ. தியாகராஜன்.
- புதுச்சேரி

— with Karthik Raja, Venkatesh Venki,Swis Sheriff, Karthik Raja and Venkatesh K Venki.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக