தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 பிப்ரவரி, 2012

வாழைக்காய்.


சித்தர்கள் அருளிய உணவு வகைகள்!!

1.வாழைக்காய்.



வாழைக்காயைப் புளிமிளகாய் காரசாரமிட்டுக்குழம்பு வைத்தும்,அவித்தும், பொரித்தும், காரமிட்டு வறுத்தும், பொடிமாஸ் செய்தும் கடலைப்பருப்பு போட்டுக் கூட்டு வைத்தும் பலவகையாகச் செய்து உனவுடன் உட்கொள்ளலாம்.

வாழைக்காயை உண்பதனால் பித்தம், பித்தசுரம், வாந்தி, குடல்புரட்டல், மனக்கலக்கம், மனக்குழப்பம், தலைச்சுற்றல், பைத்தியம், உமிழ்நீர்ச்சுரப்பு, வயிறு உளைதல், உடல் உஷ்ணம், இருமல், இரைப்பிருமல், இளைப்பிருமல், இழுப்பிருமல், தும்மல், சளி, சலதோஷம், மூக்கடைப்பு, தலைப்பாரம், கபால நீர் இவையாவும் நீங்கிக் குணமாகுமாம். மேலும் இதனால் இரத்த விருத்தியும் சரீரபலமும் உண்டாகுமாம். உணவை அதிகமாக உண்ணச்செய்யும்.

’’வாந்திபித் தம்பேத வாய்நீர் வயிறுளைத்
தார்ந்தவன லங்காத மண்டாவாஞ் - சூழ்ந்தேறு
செம்புனந் தென்புமுண்டாந் திண்டி மிகப்பெருகு
மம்புவியுள் வாழைக்கா யால்”

- பதார்த்த குணபாடம், பாடல் எண் - 736.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக