சா அங்கயற்கண்ணி :- வல்லின மெய்கள் அல்லது ஒற்றெழுத்துக்கள் மிகுமிடங்கள், மிகா இடங்களை அறிந்து கொள்வதால் பிழையின்றித் தமிழை எழுதிட இயலும்.
எளிமையான சில இலக்கண விதிகளை விளக்கிக் கூறுவதால் அவர்கட்கு மொழிப்பயிற்சி இலகுவாகலாம்.
கல்லி கேள்வியா? கல்விக் கேள்வியா?
பத்து பதினைந்தா? பத்துப் பதினைந்தா?
பாடா பெண்ணா? பாடாப் பெண்ணா?
எழுத தெரியுமா? எழுதத் தெரியுமா?
இவை போல்வன குழப்பம் தரும் சில சான்றுகள். இவற்றில் அடிக்கோடிட்ட எழுத்துக்கள் ஒற்று / புள்ளி எழுத்துக்கள், இவை தொடரில் மிகுந்து வருதலே 'ஒற்று மிகுதல்' அல்லது 'வல்லினம் மிகுதல்' ஆகும்.
வேலை செய்தான்
வேலைச் செய்தான்
'வேலை செய்தான்' என்பதில் ஒற்று மிகவில்லை. இது, பணியைச் செய்தான் என்ற பொருள்பட அமைந்தது. 'வேலைச் செய்தான்' என்பதில் ஒற்று (ச்) மிகுந்தது. 'வேல்' எனும் கருவியைச் (வேல்+ஐ) செய்தான் என்ற பொருள் பெற்றது.
இவ்விரு தொடர்களும் ஒற்று மிகுந்தாலும், ஒற்று மிகாமலும் இரு வேறு பொருள்பட்டன.
இரு சொற்கள் இணையுமிடத்தில் 'ஒற்று மிகுதல்' உண்டாகும். சொற்கள் இணைவதைப் ‘புணர்ச்சி’ என்பர்.
புணர்ச்சி என்பதன் விளக்கம்
மெய், உயிர் ஆகியவற்றை முதலும் இறுதியுமாகக் கொண்ட பகாப்பதம்
(பிரிக்க முடியாத சொல்) பகுபதம் (பிரிக்கக் கூடிய சொல்) ஆகிய இரு பதங்களும் தன்னொடுதானும், பிறிதொடு பிறிதுமாய், அல்வழிப்பொருள் அல்லது வேற்றுமைப் பொருளினால் பொருந்துமிடத்து, நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவோ, விகாரமாகவோ புணருவது 'புணர்ச்சி' எனப்படும்.
(நன்னூல். சூத்: )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக