உலகெங்கும் பரவியுள்ள மூடநம்பிக்கைகள்
திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியாரிணி பக்தர் கொடுத்த சுருட்டைக் குடிக்கும் காட்சி, பக்கத்தில் மது பாட்டில்கள், கோழிக்கறி வகையறாக்கள்.
உலகில், குறிப்பாக இந்தியாவில், பரவி நிற்கும் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. பில்லி, சூனியம், பேய், பிசாசு, மந்திரம், தந்திரம், ஜோதிடம், குறி சொல்-வது, ஆவிகளுடன் பேசுவது, மனிதஉயிர் பலி போன்ற மூடநம்பிக்கைகள் நாடெங்-கிலும் பரவியிருக்கின்றன. மக்களின் அச்சம், பேராசை, மூடநம்பிக்கை ஆகிய-வற்றைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ஆதாயம் தேடுவதில் ஈடுபடுகின்றனர்.
சூனியக்காரிகள் என்று கூறி விதவைகளை கொடுமைப்படுத்தினர்
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்-டம் பதர்கடியா கிராமத்தைச் சேர்ந்த சுசீலா கும்ஹாரின் மற்றும் இதர நான்கு விதவைகளை சூனியக்காரிகள் என்று குற்றம் சாற்றி அவர்களைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். குடிசை-களில் இருந்து இழுத்து வரப்பட்ட அவர்களின் மேலாடைகளைக் களைந்து அரைநிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அக் கிராமத்தவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். எரியும் ஊதுவத்திகளை அவர்களின் முகத்தில் தேய்த்துள்ளனர். அதனால் ஏற்பட்ட வடுக்கள் அவர்களின் முகங்களில் இன்னும் காணப்படுகின்றன.
கிராமத்தில் ஏற்படும் சில்லறை தொல்லைகளுக்கு என்ன காரணம்? அதற்கு என்ன தீர்வு? என்று கிராமத்-தவர்கள் அருகில் உள்ள மக்தும் பாபா-விடம் குறிகேட்ட போது, கிராமத்தில் உள்ள சில பெண்கள் கிராமத்திற்குக் கேடு செய்கின்றனர் என்று அவர் கூறினா-ராம். அத்துடன் இல்லாமல் அவ்வாறு கேடு செய்யும் பெண்கள் யார் யார் என்று அய்ந்து பேரை அடையா-ளம் காட்டினாராம். அவர்களில் நால்வர் முஸ்லிம் பெண்கள். அவர்கள் அனை-வருமே தனியாக வாழ்ந்து வரும் விதவை-கள். எங்களை கிராமத்தை விட்டு விரட்டி-விட்டு எங்களின் நிலங்களை அப-கரித்துக் கொள்ள திட்டம் தீட்டிய-வர்களே இவ்வாறு எங்கள் மீது பழி சுமத்தி எங்களைக் கொடுமைப்படுத்-தினர் என்று ஹபீசாம் பீவி என்ற விதவை கூறினார். 1991 முதல் சூனியம் செய்கிறார்கள் என்று குற்றம் சாற்றி 1,172 பெண்கள் கொடுமைப்படுத்திக் கொல்-லப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்-படுபவர்களுக்கு உதவி செய்வ-தற்கான அமைப்பின் தலைவர் பிரேம் சந்த் கூறினார்.
இந்தியாவில் மட்டுமல்ல. மேலை நாடுகளிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. 15 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை பில்லி, சூனியச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாற்றப் பட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அய்ரோப்பாவில் சட்டப்படியாகக் கொல்லப்பட்டுள்ள-னர். நல்வேளையாக சுவிட்சர்லாந்து நாட்டில் 1782 இல் அளிக்கப்பட்ட மரண-தண்டனை தான் இறுதியாக சட்-டப்படி அளிக்கப்பட்ட தண்டனை-யாகும்.
அமெரிக்காவில் மாசாசூட்ஸ் மாநிலத்தில் சேலம் நகரில் 1992-_93 இல் நடைபெற்ற வழக்கில் சூனியச் செயல்-கள் புரிந்ததாக 141 பேர் கைது செய்து வழக்கு தொடரப்பட்டதில், 19 பேருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது; ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்-பட்டார்.
தனது மகளையே வன்புணர்ச்சி செய்த தந்தை, உடந்தையாக இருந்த தாய்
மும்பை நகரின் புறநகர்ப் பகுதியான மீரா சாலையில் வசிக்கும் கிஷோர் சவுஹான் என்பவர் தனது 21 வயது மகளை கடந்த 8 ஆண்டுகளாகப் பாலி-யல் வன்புணர்ச்சி செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. உனது மகளை நீ வன்புணர்ச்சி செய்தால், உனக்கு ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் லாபம் கிடைக்-கும் என்று ரதோட் என்ற மாந்-திரிகன் கூறினானாம். இதற்கு தாயும் உடந்தையாம். கிஷோருடன் சேர்ந்து கொண்டு மந்திரவாதி ரதோடும் ஸ்நேகாவை அனுபவித்துள்ளான். அந்த மந்திரவாதிக்கும் ஸ்நேகாவின் தாய்க்கும் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படு-கிறது. ஸ்நோகாவின் தங்கை 15 வயது சரிதாவையும் மந்திரவாதி கெடுத்து விட்ட பின், தாளமுடியாத ஸ்நேகா காவல்-துறையில் புகார் செய்துள்ளார். காவல்துறையினர் கிஷோரையும் ரதோடையும் கைது செய்துள்ளனர். தாயின் மீதும் வழக்கு தொடுத்துள்ளனர். இப்போது இந்த இரு பெண்களும் அவர்களின் மாமன் வீட்டில் வாழ்கின்றனர்.
மனித உயிர் பலி கொடுக்கும்
பழங்குடியினத்தவர் பழக்கம்
ஒரிசா மாநிலம் ஒடிஷா மலைப் பகுதியில் வாழும் கோண்டு பழங்-குடியினத்தினரிடம் மனித உயிர் பலி கொடுக்கும் பழக்கம் நிலவி வந்திருக்-கிறது. மலைக் கிராமங்களில் உள்ள இவர்கள் சமவெளியில் உள்ள கிராமங்-களிலிருந்து குழந்தைகளைக் கடத்திச் சென்று தங்கள் நிலங்களில் பலி கொடுத்-துள்ளனர். அவ்வாறு பலி கொடுத்தால் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் இருக்கும் என்பது அவர்களின் நம்-பிக்கை. நிலம் தூய்மையான ரத்தத்தைக் குடிக்காவிட்டால் நன்றாக விளைச்சல் தராது என்று அவர்கள் நம்பினர். மழை பொய்த்துப் போவதால் வறட்சி ஏற்-பட்டு விவசாயம் அடிக்கடி பாதிக்கப்-படுவது இப்பகுதியில் வழக்கம்தான்; அதனால் இப் பழங்குடி மக்கள் இத்-தகைய உயிர் பலிகொடுக்கும் பழக்-கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று அனுப் சந்த்ர தாஸ் என்னும் மரபுவழி ஆய்வாளர் கூறுகிறார்.
இத்தகைய உயிர் பலி கொடுக்கும் பழக்கத்தைத் தடுத்து நிறுத்த லண்-டனிலிருந்து கேம்பல் என்னும் ராணுவ மேஜர் 1836 இல் வரவழைக்கப்பட்டு, மிகுந்த முயற்சியின் பேரில் அவர் இப்-பகுதியில் இருந்த இந்த வழக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். 1,506 குழந்-தைகளை பலி கொடுக்கப்படுவதிலிருந்து இவர் காப்பாற்றினாராம். என்றாலும் கந்தமால் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 1972 இல், 70 ஆண்டுகளுக்-குப் பின் கொடுக்கப்பட்டதுதான் இறுதி-யாக கொடுக்கப்பட்ட உயிர்பலியாகும்.
இத்தகைய மூடநம்பிக்கைகளுக்கான காரணங்கள்
நாம் குழந்தைகளாக இருக்கும் போது நமது தாய்கள் நம்பியவற்றை நாமும் நம்பி வந்தோம்; அவர்கள் அஞ்சியவற்-றிற்கு நாமும் அஞ்சி வந்தோம். சாதா-ரண மூடநம்பிக்கையிலிருந்து, பில்லி, சூனியம், பேய், பிசாசு வரை அனைத்தை-யும் நம்பிய தாய்மார்கள் தங்களின் செல்லக் குழந்தைகளுக்கு இவற்றால் ஆபத்து வந்து விடக்கூடாது என்று அஞ்சி-னார்கள் என்று இந்தியப் பகுத்-தறி-வாளர் கழகங்களின் கூட்டமைப்-பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் கூறுகிறார். தங்களுக்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாகக் கூறிக்கொண்டு லிங்கம், விபூதி வரவழைப்பது போன்ற செயல்களைச் செய்து வரும் சாமியார்களின் தந்திரங்களிலும், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், அலகு குத்திக் கொள்ளுதல் போன்ற செயல்களிலும் தெய்வீகத் தன்மை ஏதும் இல்லை என்பதையும், எவர் வேண்டு-மானாலும் இவற்றைச் செய்யலாம் என்பதையும் அறிவியல் சோதனைகள் மூலம் இவர் நாடெங்கும் செய்து காட்டி வருகிறார். வடநாட்டின் சில பகுதி-களில் வயது முதிர்ந்த விதவை-களின் சொத்துகளைப் பறிப்பதற்காக அவர்களை சூனியக்காரிகள் என்று குற்றம் சாற்றி கல்லால் அடித்துக் கொன்றி-ருக்கிறார்கள் என்று நரேந்திர நாயக் கூறுகிறார்.
பழையகாலத்தில் வேண்டுமானால் இத்தகைய பில்லி, சூனியத்தை நம்புவ-தற்கு அறியாமையும், அச்சமும் காரண-மாக இருந்திருக்கலாம்; ஆனால் இன்று சூனியக்காரிகள் என்று குற்றம் சாற்று-வதற்கு மக்களின் பேராசையே கார-ணம். சொத்துகளுடன் தனியாக வாழும் பெண்களை கிராமத் தலைவர்களும், அரசியல்வாதிகளும், சில நேரங்களில் காவல் துறையினரும் சூனியக்காரிகள் என்று கூறி அவர்களது சொத்துகளைக் கொள்ளையடிக்க முனைகின்றனர் என்று ‘‘சுயசிந்தனை’’ இதழாசிரியர் சுமித்ரா பத்மநாபக் கூறுகிறார்.
மேற்கு வங்காளம் மால்டா என்னும் இடத்தில் மூன்று முதிய பெண்களை கம்பத்தில் கட்டி வைத்து சவுக்கினால் அடித்துக் கொண்டிருந்தபோது, தாங்கள் சென்று அவர்களை விடுவித்ததை சுமித்ரா நினைவு கூர்கிறார்.
1987, 2003_ஆம் ஆண்டுகளுக்-கிடையே 2,556 பெண்கள் சூனியக்காரிகள் என்று குற்றம் சாற்றப்பட்டு கொல்-லப்பட்டதாக அதிகார பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு இந்தியாவில் மட்டும் 2001-_20-06 ஆண்டுகளுக்கிடையே 700 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
வேறு ஒரு நபர் மூலமாகவோ, அல்லது ஒரு ஊஜா அட்டை மூல-மாகவோ ஆவிகளுடன் பேசுவதையும் சிலர் நம்புகின்றனர். இத்தகைய மூட நம்பிக்கைகளைப் பற்றி நரேந்திர நாயக் குறிப்பிடுகையில் இந்தியர்களை கற்ற-வர்கள், - கல்லாதவர்கள் என்று பிரிக்க முடியாது; வேண்டுமானால் எழுத்தறிவு பெற்றவர்கள், - பெறாதவர்கள் என்று வேண்டுமானால் பிரிக்கலாம். பொய்களில் இருந்து உண்மைகளையும், தவறுகளில் இருந்து சரியானவற்றையும் பிரித்தறிய நமது கல்வி முறை நமக்குக் கற்பிப்பதில்லை. நம் நாட்டில் வளர்ந்து வந்துள்ள மூடநம்பிக்கைகளே இதன் காரணம் என்று கூறுகிறார்.
திராவிடர் கழகம் நடத்தும் மந்திரமா?
தந்திரமா நிகழ்ச்சிகள்
இத்தகைய மூடநம்பிக்கைகளை மக்களிடையே இருந்து அகற்றவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திராவிடர் கழகம் சார்பில் மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சிகளை தமிழ் நாடெங்கும் நடத்தி வருகின்றனர். திராவிடர் கழக மாநாடுகளின்போது தீச்சட்டி ஏந்துதல், தீ மிதித்தல், அலகு குத்திகார் இழுத்தல் போன்றவற்றை தொண்டர்கள் செய்து காட்டி இதில் தெய்வீகத் தன்மை ஏதுமில்லை என்பதை மெய்ப்பித்து வருகி-றார்கள். இத்தகைய நிகழ்ச்சி-களை நடத்திக் காட்டுவதற்கான தொண்டர்-களுக்குப் பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படுகின்றன.
(‘டெக்கான் கிரானிக்கல்’
1.11.2009 கட்டுரையைத் தழுவியது)
விடுதலை வெளியீடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக