நாட்டுப்புறக்கலைகளில் என்ன இருக்கு என்பவர்கள் ஐரோப்பிய,அமெரிக்க நாட்டுப்புறக் கலைகளை அள்ளிக்கொடுத்து ரசிக்கின்றனர்,கற்கின்றனர்,தண்ணியடித்திட்டு பப்,டிஸ்கோ என்று கூத்தடிக்கின்றனர்.ஆபாசம் என்பவர்கள் குடும்பத்தோடு பார்க்கும் படங்களின் தரங்களை சொல்லவா?கரகாட்டம் ஆபாசம் ,கவர்ச்சிக்கன்னிகள் ஆட்டம் எப்படிப் பார்ப்பது என்பவர்கள், சில்க்,அனுராதா,டிச்கோசாந்தியை எப்படி ரசித்தார்களாம்,இப்போது கதாநாயகிகள் கவர்ச்சிக்கன்னிகள் ஆகி ஆடுவதும் அதை குடும்பமே ரசிப்பதையும் எப்படிச்சொல்ல!!பேசுறாங்க உப்புச்சப்பில்ல்லாமல்!இபோ கதைகளை ஆபாசமாக எழுதி பெண்களை நிர்வாணப் படுத்தி காட்சிக்கு தேவையென்று காட்டுகிறார்களே,அடுத்து நீலப் படம் எடுக்க தயாராகிறார்களே,அதை பார்க்கும் இவர்கள் நம் பழமை பொருந்திய, அன்றைய சமூகத்தை நம் கண்முன் காட்டும் கலைகளை கலைஞர்களை அந்நியரின் பிச்சைப் பணத்துக்கு கூலிசெய்துகொண்டு பேசுவது அசிங்கமாக உள்ளது!!கரகாட்டக்காரன்,பருத்திவீரன்,அங்காடித்தெரு வெற்றிபெற்ற நாட்டில் என்ற நிலையற்ற தொழிலில் இருக்கும் திடீர் பணக்கார குசும்பு தாங்க முடியல.வேளாண்மை இந்தியாவில் முழுமையாக அழிந்தால் இந்தியாவை இவர்கள் பார்க்கும் எந்த தொழில் காப்பாற்றும் என்று சொல்லுங்கள்???பணம் இருந்தால் பசி போகுமா??பசி போக்குபவனின் களைப்பை போக்கும் கலைகளை மதிக்கக தெரியாவிட்டாலும் பரவாயில்லை மிதியாதீர்கள்!!
http://www.thiraivideo.com/video/neeya-naana-17-04-2011.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக