தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 பிப்ரவரி, 2012

மள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் !!



பத்திரகாளி மள்ளத்தி
அடிமை என்பதை சுட்டிக் காட்டும் 'பள்ளர்' என்பதை நீக்கி விட்டு அந்த இடத்தில பள்ளரின் உண்மையான அரசகுலப் பெயரான 'மள்ளர்' என்ற பெயரை ஒட்டு மொத்த மள்ளர்களின் எல்லா கிளை சாதிகளுக்கும் தலைப்பு சாதியாக பெயர் வைக்க வேண்டும்..
மள்ளர் என்ற சொல் கி.மு. 300 முதல் சங்க காலம் தொட்டு பள்ளருக்கு வழங்கப் படும் மெய்யான குலப் பெயராகும். தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் சுமார் கி.பி.15 -ம் நூற்றாண்டில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகள் மூலம், இந்துப் புராணங்களின் படி மள்ளருக்கு வைக்கப்பட்ட இந்து மதம் கலந்த பெயராகும். கிறித்தவ, முகமதிய, புத்த மதம் மாறிய மல்லர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் பொருந்தாது. மள்ளர் என்ற சொல்லில் எந்த மதமும் கலக்கவில்லை.
தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை வைத்திருப்பதாலும் , இப்பெயரையே மீண்டும் மீண்டும் பேசுவதாலும்,எழுதுவதாலும் தற்போது அரசுக்கு இச் சமுதாய தலைவர்கள் விடுத்திருக்கும் கோரிக்கையில் அனைத்து பள்ளுச் சாதிகளுக்கும் தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப் பெயர் வைக்க கோரிக்கை விடுத்திருப்பதாலும் - இதன் மூலம் மள்ளர் குலத் தலைவர்கள் தம் மூவேந்தர் குல வரலாற்றை , படை வீரர் வரலாற்றை , உழவர் வரலாற்றை தெரிந்தோ தெரியாமலோ மூடிப் புதைக்கிறார்கள். தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை வைப்பது என்பது எதிர்கால மள்ளர் குல வரலாற்றுக்குப் பேராபத்தாகும் எதிர்கால மள்ளர் சமுதாயம் இவர்களை அறவே மன்னிக்காது!!!







1 கருத்து: