தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, February 9, 2017

வரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழரின் முதலாவது தலைநகரம்!(வீடியோ,படங்கள் இணைப்பு )

நாடுகளை கைப்பற்றவும், வல்லரசுகளாக உருவாகவும் நாடுகளிடையே அன்றாடம் போட்டித்தன்மை நிலவிக்கொண்டே இருக்கின்றது.

இலங்கையை பொறுத்த மட்டில் இன்று நேற்றல்ல, இலங்கையின் வரலாறு ஆரம்பித்த காலப்பகுதியிலே இலங்கையை கைப்பற்றுவதற்கான போட்டித்தன்மை உருவாகி விட்டது.

ஆனாலும் இலங்கைத்தமிழர்களை பொறுத்தமட்டில் தொடர்ச்சியாக இந்நாட்டிலேயே வாழ்ந்தவர்கள் என்றில்லாமல் வாழ்வாதாரத்திற்காக பிற நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டதாகவே வரலாறுகள் கூறுகின்றன.


திருகோணமலை வரலாறு

ஆனால் எமக்கெல்லாம் தெரிந்திடாத முக்கியமான ஒரு விடயத்தினையே இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அதாவது இலங்கைத்தமிழரின் வரலாறு எங்கு, எப்போது ஆரம்பமானது என்று எமக்கு தெரியுமா? இலங்கைத்தமிழரின் பிறப்பிடம் எதுவென்று எமக்கு தெரியுமா?

இலங்கைத்தமிழின் அடையாளம் தமிழர்கள் பல யுகங்களாக வாழ்ந்த ஒரே பூமிதான் இலங்கை மண்ணின் திருகோணமலை நகரம்.

விஜயனின் இலங்கை வருகையின் பின்புதான் இலங்கையின் வரலாறு ஆரம்பமாகின்றது. ஆனாலும் விஜயன் இலங்கை வரும் முன்பதாக இலங்கையை ஆண்ட வம்சமாக தமிழர்களே திகழ்ந்திருக்கிறார்கள்.

நாம் அனைவரும் இயக்கர், நாகர் என்ற குலத்தினர் வாழந்ததாகவே அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் வெளியுலகுக்கு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத வம்சத்தினராக தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

திருகோணமலை வரலாறு

அக்காலகட்டத்தில் தமிழர்களால் கோகர்ண( திருகோணமலை) தலைநகரமாக கொள்ளப்பட்டு ஆட்சி செய்யப்பட்டுள்ளது.

இந்த இரகசியம் விஜயன் இலங்கை வந்த போதே அறிந்துக் கொண்டான். குவேனியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பின்னர் சிறிசவத்துப்புர மன்னனின் மகளையே திருமணம் செய்துக் கொண்டான்.

ஒருக்கட்டத்தில் தனக்கு வாரிசு இல்லாம் போகவே தனது சகோதரனின் மகனான பண்டு வாசு தேவனை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கின்றான்.

இச்சமயத்தில் விஜயனின் கட்டளைப்படி கோகர்ண துறைமுகத்தில் மாறு வேடத்தில் தரையிறங்கிய பண்டுவாசு தேவ குழுவினர் தமிழர்களின் தார்ப்பரியத்தையும், ஆட்சியையும் அறிந்து கொண்டதாக மகாவம்சம் கூறுகின்றது.

திருகோணமலை வரலாறு

அவ்வாறு இல்லாவிட்டால் பண்டுவாசு தேவன் எதற்காக மாறு வேடம் தரிக்க வேண்டும், விஜயன் தம்பபன்னியில் ஆட்சிப் பீடம் அமைத்திருக்கும் போது திருகோணமலையில் தரையிறங்க காரணம் என்ன, ஆகவே தமிழர்களை ஒடுக்கி, அடக்கியாளும் முயற்சி அன்றே திட்டமிடப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் வரலாறு தொடர்பில் பேசும் முக்கியமான நூல் மகாவம்சம். சில இடங்களில் விஜயனுக்கு முன்னரான தமிழர்கள், மற்றும் திருகோணமலைத் தொடர்பில் கூறாவிட்டாலும் சில இடங்களில் இந்த உண்மையையும் தெளிவுப்படுத்தியிருக்கின்றது.

இது தவிர துட்டகைமுனு மன்னன் எல்லாளனை வெற்றி கொள்ளும் முன்னர் திருகோணமலையில் 32 தமிழ் அரசுகளை வெற்றி கொண்டதாகவும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.

இருப்பினும் இவ்வாறான காலங்களையெல்லாம் கடந்து இலங்கையில் மகாசேனனின் ஆட்சியின் போதே திருகோணமலை எனும் நகரம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இதற்குப் பின்னர் தான் தமிழர்கள் தொடர்பில் உலகமே தெரிந்துக்கொள்ள ஆரம்பித்தது.

மகாசேனன் இலங்கையின் தமிழ் வரலாறுகளை அடையாளப்படுத்தும் கோவில்களையும், சிவலிங்கங்களையும் அழித்த போது திருகோணமலையின் பிரசித்திப்பெற்ற சிவலிங்கங்களையும் அழித்திருக்கின்றான். இதனூடக நாம் அறிந்து கொள்ள முடியும், இலங்கைத் தமிழரின் பிறப்பிடம் திருகோணமலை என்று.

தேவார திருமறைகளில் அதிகம் பேசப்பட்ட இடமாகவும் திருகோணமலைதான் திகழ்கின்றது. சம்பந்தரால் சிறப்பித்து பாடப்பட்ட முதல் திருத்தலமும் திருகோணமலை சார்ந்ததாகவே காணப்படுகின்றது.

இராவணனால் பூஜிக்கப்பட்ட முதல் பிரதேசமும் இதுவே. அதற்கு சான்றாக இராவணன் கல்வெட்டினை அடையாளப்படுத்த முடியும். மேலும் அகத்திய மகரிசி வணங்கிச் சென்ற இலங்கையின் ஒரே ஒரு இடமும் இதுதான்.

இலங்கைத்த தமிழரின் தனி அடையாளம் எனப்படும் இந்நகரம் வரலாற்றில் கூற முடியாத பல அழிவுகளையும் சந்தித்திருக்கின்றது.

திருகோணமலை வரலாறு

அதாவது போர்த்துக்கேயர் காலத்தில் 1624இல் கொணஸ்டடைன் டீ.சா என்பவனால் சிறப்புப் பெற்ற திருகோணேச்சரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.

இவ்வாறு தமிழரின் பிறப்புக்கும், வரலாற்றிற்கும் பெயர் பெற்ற நகரம். தமிழரின் தனி அடையாளம் என்பது எம்மில் பலருக்கு தெரியாது என்பதுதான் வருந்ததத்தக்கது.

முடிவில் கூறுவோமானால் இலங்கையின் வரலாறு விஜயன் காலத்தில் ஆரம்பிக்கப்படவில்லை, அதற்கு முன்னரே வாழ்ந்த தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதல் தலைநகரம் திருகோணமலையே ஆகும்.

தமிழர்கள் மட்டுமே அரசாண்ட வரலாற்று பூமி , லட்சம் தமிழர்களை உருவாக்கித்தந்திருக்கும் ஓரிடம் இந்நகரமே ஆகும். எண்ணிலடங்காச் சிறப்பினை கொண்ட தமிழரின் தனி நகரை தமிழராக இருந்து பாதுகாக்க முடியாவிட்டாலும் அழிக்காதிருப்போம்.

ஏனெனில் தமிழரின் தனி கோட்டை என அடையாளப்படுத்த இந்நகரமானது இறுதி வரை எஞ்சியிருக்க வேண்டும்.

இனியும் தலை நிமிர்ந்து சொல்வோம் ”இலங்கை மண்ணின் மூத்த குடிகள் தமிழர்கள் தான் என்று”
09 Feb 2017
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1486633701&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment