தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 மார்ச், 2017

பெண்களை இழிவுப்படுத்தும் இந்த பாடல்கள் தேவையா? ஸ்பெஷல் வீடியோவுடன்!


இது இருக்கவே கூடாது ஆண், பெண் இருவரும் சமம் என்று போராடியவர்கள் பலர். இதனை அனைவருக்கும் உணர்த்தும் பொறுட்டு பல எழுத்தாளர்கள், பாடல்கள், கதைகள் என பெண்களை போற்றும் வண்ணம் எழுதியுள்ளனர்.

மக்களுக்கு நல்லதை சொல்லும் பொருட்டு பெரிய பங்கு வகிக்கிறது சினிமா. சினிமா மூலம் பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா என பல ஜாம்பவான்கள் பெண்களுக்காகவே நிறைய படங்கள் இயக்கியிருக்கின்றனர்.

பெண்களுக்காக மகாகவி பாரதிக்கு பிறகு கண்ணதாசன் எழுதிய வரிகள் அனைத்தும் மனதில் நிற்கிறது. இப்படி சினிமாவில் நம்முடைய ஜாம்பவான்கள் பெண்களை போற்றி, வர்ணித்து செய்த விஷயங்கள் இப்போதுள்ள சினிமாகாரர்கள் எப்படி பெண்களை சித்தரிக்கிறார்கள்???????

உதாரணத்துக்கு குழந்தைகளுக்கு அப்படிஎன்றால் என்னவென்றே தெரியாத ஒரு வார்த்தையை தன் படத்தில் சொல்லியிருக்கிறார் ஒரு சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருப்பவர். இதை ஒரு பெண் நடிகை தட்டிக் கேட்டால், அதற்கு அந்த நடிகர் சொல்லும் பதில் இதில் என்ன இருக்கிறது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே என்கிறார்.

எங்கே அந்த நடிகரை போய் அவருடைய அண்ணன் மகனிடம் அந்த வார்த்தையை போய் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.

மானங்கெட்ட நடிகர்களே, உங்களால் தான் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரிக்கிறது.

பெண்கள் மோசமானவர்கள் என்றே சித்தரிக்கும் படங்கள் தான் அதிகம் இன்றைய காலத்தில். ஆனால் ஆண்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பது சினிமாவில் பார்க்க முடியவில்லை, அண்மை காலமாக நாம் நிஜத்தில் பார்த்து வருகிறோம். பாவனா, ஹாசினி போன்ற பெண்கள் மூலமாக.

இதுபோன்ற வன்முறைகளுக்கு சினிமா காரர்களும் குரல் கொடுக்கிறார்கள். பெண்களுக்கு இதுபோன்ற அநியாயங்கள் நடக்க கூடாது, நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சப்போர்ட் செய்கிறோம் என்கிறார்கள்.

ஆனால் அவர்களது படத்தில் மட்டும் ஏன் பெண்களுக்கு எதிராக நடக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

அந்த காலத்திலும் காதல் தோல்வி பாடல்கள், பெண்களை போற்றும் பாடல்கள், பெண் அழகை வர்ணிக்கும் பாடல்கள் என இருக்கின்றன. ஆனால் அதில் எல்லாம் கொச்சை வார்த்தைகளால் இல்லாமல் மிகவும் டீசண்ட்டாக இருக்கும். ஆனா இன்றைய காலத்தில்??????

அன்றைய காலத்திலும், இன்றைய காலத்திலும் எப்படிப்பட்ட பாடல்கள் இருக்கின்றது என்பதை இதோ பாருங்கள்

இன்றைய கால பாடல்கள்

அடிடா அவள ஒதடா அவள- மயக்கம் என்ன
எவன்டி உன்ன பெத்தான்- வானம்
அடியே அடியே இவளே- ரோமியோ ஜுலியட்
இந்த பொண்ணுங்களே இப்படிதான் தெரிஞ்சு போச்சுடா- வருத்தப்படாத வாலிபர் சங்கம்
பிட்டு படம் டீ, முத்தம் கொடுத்த மாயக்காரி- திரிஷா இல்லைன்னா நயன்தாரா
Why this kolaveri Di- 3
என் செல்ல பேரு ஆப்பிள் சைசா கடிச்சிக்கோ - போக்கிரி


அந்த கால பாடல்கள்


அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா - ராஜகுமாரன்
கூந்தல் முடிகள், நெற்றி பரப்பில்
கோலம் போடுதே அதுவா?
சிரிக்கும் போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா? - கேப்டன் மகள்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடும் கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
இசை அமுதே.. புதையல்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே - நிழல் நிஜமாகிறது
பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே
ஆலகாலமா விழியா சொல்லடா
காதல் காவியம் வேஷமே ஓ - ஒரு மூடன் கதை சொன்னால்
கண்ணே! இது ஊமைக்காதல்
காத்திருந்து நொந்தேனே!
தண்டனைக்குப் பின்னே நீயும்
சாட்சி சொல்ல வந்தாயே!
காத்திருந்து ஆனதென்ன
கண்ணீர் வற்றிப் போனதென்ன
தேர் முறிஞ்சு போனபின்னே...
தெய்வம் வந்து லாபமென்ன
என்ன சொல்லி என்ன பெண்ணே!
என்னைச்சுற்றி வேதாந்தம்
பாறாங்கல்லில் முட்டிக்கொண்டு
முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம்... ஓஓஓ... - கடலோரக் கவிதைகள்
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ரசிப்பதில்லை - ராகம் தேடும் பல்லவி

http://www.cineulagam.com/articles/06/137528?ref=related_tag

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக