தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 மார்ச், 2017

காகம் எச்சமிட்டு விட்டதா? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

காகம் எந்த உணவையும் தனக்கென்று சேர்க்காமல், பிற காகங்களுக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ணும் சிறப்பியல்பை கொண்ட பறவையாகும்.
நமது அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவையாக உள்ள காகத்தை இறந்த நம் முன்னோரின் அம்சமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் நம் வாழ்வில் காகத்தினால் ஏற்படும் ஒருசில சகுனங்களை பற்றி காண்போம்.
பயணத்தின் போது ஏற்படும் காகத்தின் சகுனம் என்ன?
  • ஒருவரின் பயணத்தின் போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போனால் அது தன நஷ்டத்தையும் உண்டாக்குமாம்.
  • வெளியில் பயணிக்கும் ஒருவரை நோக்கிக் காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், அந்த பயணத்தைத் தவிர்த்து விட வேண்டுமாம்.
  • ஒருவர் பயணிக்கும் போது ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டும் காட்சி தென்பட்டால், அவர்களின் பயணம் இனிதாகுமாம்.
  • வெளியில் செல்லும் போது, ஆண் மற்றும் பெண் காகங்கள் ஒன்றாக இருந்து கரைந்து கொண்டிருந்தால், அவர்களின் வீட்டில் பெண்களின் சேர்க்கை ஏற்படுமாம்.
  • ஒருவருடைய பயணத்தின் போது, அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவருடைய உடல் மற்றும் நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால், அகால மரணம் அவருக்கு நேரிடலாம்.
  • ஒருவரின் வாகனம், குடை, காலணி ஆகியவற்றின் மீது காகம் எச்சம் விட்டால், அவர்களின் பயணத்தின் போது, உணவுக்குப் பஞ்சம் இருக்காதாம்.
  • ஒருவர் யாத்திரைக்கு புறப்படும் போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிட்டும்.
  • ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால், தன லாபம் மற்றும் பெண்களால் பல நன்மை கிடைக்குமாம்.
காகத்தின் செயலும் அதன் திசையின் சகுனம் என்ன?
  • ஒருவருடைய வீட்டின் தென்கிழக்கு திசையை நோக்கிக் காகம் கரைந்தால், தங்கம் சேரும்.
  • வீட்டின் தெற்கு திசையை நோக்கி, கரைந்தால், உளுந்து, கொள்ளு போன்ற தானிய லாபம் கிடைக்கும்.
  • தென்மேற்கு திசையை நோக்கி கரைந்தால், குதிரை, தயிர், எண்ணெய், உணவு போன்ற உணவுகள் சேரும்.
  • மேற்கு திசையை நோக்கி காகம் கரைந்தால், மாமிச உணவு, மது வகைகள், நெல் முதலான தானியங் கள், முத்து, பவளம் போன்று கடலில் விளையும் பொருட்கள், உலர்ந்த பழ வகைகள் கிடைக்கும்.
  • வடக்கு திசையை நோக்கி காகம் கரைந்தால் ஆடைகள், நல்ல உணவு மற்றும் வாகனங்கள் ஆகியன கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக