தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 மார்ச், 2017

ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம், இணையத்தில் நீங்களே பாக்கலாம்!!

நட்சத்திரங்கள் மொத்தம் 27.இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்..
உதாரணமாக 27 நட்சத்திரங்களின் பட்டியல் கொடுத்துள்ளேன்.
இவற்றில் உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,21,25 வது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வந்தால் பிரிவு,மனவருத்தம்,விவாகரத்து ,குறை ஆயுள்,குழந்தை இன்மை,அசுபம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.
இவை தவிர்த்த நட்சத்திரங்களில் முக்கியமான பொருத்தங்களான…,
தினபொருத்தம்,கணபொருத்தம்,யோனிபொருத்தம்,ராசி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்வர வேண்டும்..இவை இல்லாதவை பொருத்தம் இல்லை..பத்து பொருத்தங்களில் இந்த ஐந்து பொருத்தங்கள் மிக அவசியம்.
தினப்பொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வர,2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு..இதன் பலன் செல்வாக்குடன் வாழ்தல்,தம்பதிகள் ஒற்றுமை.
கணப்பொருத்தம்;
செல்வ வளத்துடன் வாழ்தல் குறிக்கும் பொருத்தம்,இருவர் நட்சத்திரமும் ராட்ஷ கணமாக இருத்தல் கூடாது..தேவகணம்,மனுஷ கணம்,ராட்ஷகணம் என பிரிக்கப்பட்டிருக்கும்..தேவ கணம்-தேவ கணம்,மனுஷ கணம்-மனுஷ கணம் பொருத்தம் உண்டு.
மகேந்திரபொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி,எண்ணும்போது ஆன் நட்சத்திரம்1,4,7,10,13,16,19,22,25 வது நட்சத்திரமாக வரக்கூடாது..இதன் பலன் குழந்தை பாக்யம்.ஆயுள் விருத்தி.இந்த பொருத்தம் வந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன்,குரு நிலையை ஆராய வேண்டும்..லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும் ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்க்கனும்.அதில் ராகு ,கேது உட்பட ஏதேனும் பாவ கிரகங்கள் இருக்கிரதா என கவனிக்கவும்.ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும்,பெண் ஜாதகத்தில் குருவும் நன்றக இருந்தால் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்காது.5ஆம் இடத்து அதிபதி பாவ கிரக தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தகுந்த ஜோதிடரின் துணையுடன் ஆராய வேண்டும்..இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்கும்.
யோனி பொருத்தம்;
எட்டலை,பத்தலை பிரச்சினை வரக்கூடாது என்றால் இந்த பொருத்தம் அவசியம்.தாம்பத்தியம் செக்ஸ் திருப்தியை பற்றி சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம்…
.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆடு,குதிரை,சிங்கம் என யோனி பிரிக்கப்பட்டிருக்கும்…அதற்கு பகையான யோனியும் சொல்லப்பட்டிருக்கும்..பகை யோனி நட்சத்திரங்களை சேர்க்க கூடாது……
பாம்பு என ரொகிணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..எலி என பூரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..பாம்பு, எலியை கண்டால் விடுமா விழுங்கிவிடும்..ரோகிணிக்கு பூரம் .அடங்கித்தான் போக முடியும்…நாய் ,பூனை என சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திரங்களை சேர்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்குமா.இதெல்லாம் கவனிக்க வெண்டும் அதுதான் யோனி பொருத்தம்.
ராசிபொருத்தம்;
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2 வது ராசியானால் மரணம்,3 வது ராசி துக்கம்,4 வது ஏழ்மை,5 வது ராசி வைதவ்யம்.6 வது ராசி புத்திர நாசம்,7வது உத்தமம்.மாங்கல்யம்,ஆயுள் விருத்தி,8 வது அதிக புத்திர லாபம்,9வது செளமங்கல்யம்,10 வது ஐஸ்வர்யம்,11 வது சுகம்,12 வது ஆயுள் விருத்தி,இருவருக்கும் ஒருவருக்கொருவர் ராசியோ லக்னமோ மறையக்கூடாது அதாவது 6,8,12ல் இருக்க கூடாது..அப்படி இருந்தால் ஒத்துப்போகாது.
ரஜ்ஜு பொருத்தம்;
ரோகிணி சந்திரன் நட்சத்திரம்..அஸ்தம் சந்திரன் நட்சத்திரம்.இப்படி ஒரே கிரகத்தின் நட்சத்திரங்களை இனைக்க வேண்டாம்..மாங்கல்ய பொருத்தம் என்னும் இருவரது ஆயுளை பற்றி சொல்லும் முக்கியமானபொருத்தம்.27 நட்சத்திரங்களையும் சிரசு ரஜ்ஜு,பாத ரஜ்ஜு,தொடை ரஜ்ஜு,உதர ரஜ்ஜு,என பிரித்திருப்பார்கள்..கணவன்,மனைவி நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் கண்டம்,நஷ்டம்,விபத்து என சொல்கிறது..இரண்டு நட்சத்திரங்களும் வேறு வேறு ரஜ்ஜுவில் இருந்தால் பொருத்தம் உண்டு.
பொருத்தம் சுலபமாக பார்க்க உதவும் அட்டவணை..
பெண்களுக்கு பார்க்க ,பொருத்தம்;
ஆண்களுக்கு திருமண பொருத்தம் நட்சத்திர அட்டவணை;
நட்சத்திர பொருத்தம் பார்த்தாலும் அவசியம் ஜாதகத்தை ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது….இருவருக்கும் லக்னத்துக்கு 7ஆம் இடம் சந்திரனுக்கு 7ஆம் இடம் ,பார்க்கனும்..4ஆம் இடமாகிய ஒழுக்க ஸ்தானத்தை பார்க்கனும்.10 ஆம் இடமாகிய்ட தொழில் ஸ்தானம்,2 ஆம் இடமாகிய குடும்ப ஸ்தானம்…மாமனார் ,மாமியார் ஸ்தானம்,குடும்ப ஒற்றுமை,குணநலன் எப்படி என்ற விபரமெல்லாம் ஜாதகத்தில் தெளிவாக தெரியும்.இருவருக்கும் என்ன திசை நடக்கிறது..? அந்த திசை யோகமான திசையா நஷ்டம் தரும் திசையா என்பதை ஆராய்ந்து செய்தால்தான் திருமணம் இனிக்கும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக