அவற்றுள் வடமாகாணம் போற்றும் எழில் கொஞ்சும் மானிப்பாய் நகரில் அமைந்துள்ள ஆலயம்தான் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்.
ஈழத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயங்களில் முதன்மையான ஆலயம்தான் மருதடி விநாயகர் ஆலயம். தமிழ் மன்னர்களின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதாகவும், பராமரிக்கப்பட்ட ஆலயமாக இவ்வாலயம் காணப்படுகின்றது.
இவ்வாலயம் தொடர்பிலான பல வரலாறுகள் காணப்படுகின்றன. அவ்வரலாறுகள் அனைத்தும் தனியொரு புத்தகம் வாயிலாக தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கையில் காணப்படும் ஏனைய ஆலயங்களை விடவும் தன்கென பொக்கிஷமாக வரலாற்று பெட்டகத்தினை இந்த ஆலயமே கொண்டுள்ளது.
குறித்த நூலில் என்ன வரலாறு உள்ளடக்கப்பட்டிருக்கும்..? கருங்கற்களை மட்டும் கொண்டு இவ்வாலயம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன?
தனியான பிரமாண்டமான இராஜகோபுரம் சுமந்து வைத்துள்ள இரகசியம் என்ன? போன்ற சில மர்மமான கேள்விகளும் நீடித்து கொண்டே செல்கின்றன.
அவ்வாறான கேள்விகளுக்கு விடைதேடும் முகமாக அமைந்த பயணமே இது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக