"T-20" இதென்ன T20 ?
===================
(தாதுப் பஞ்சத்தின் தொடர்ச்சி)
T-20 என்றவுடன் பெரும்பாலும் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது20/20 கிரிக்கெட்தான். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் T-20 என்பது 20/20 போல கிரிக்கெட் விளையாட்டு அல்ல!
1960 - களில் நிலவிய கடுமையான வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போனது. அப்போது அமெரிக்கா நமக்கு கோதுமையை தானமாக வழங்கிவந்தது. அந்த கோதுமையின் ரகம்தான் "T-20". இந்த கோதுமை அமெரிக்காவில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்பட்டு வந்தது!
இந்த கோதுமை, மக்கிய, செந்நிறமாக, வண்டுகள் அரித்துப்போன ஒரு மாட்டுத்தீவனமாகும்! இது நம்மூரில் மாடுகளுக்கு கஞ்சி காய்ச்சும் மாட்டு நொய்யைவிட மோசமாக இருந்தது! அந்த ரக கோதுமையைத்தான் அமெரிக்கா நமக்கு தானமாக (பிச்சையாக) வழங்கிவந்தது!
எனது தாத்தா அந்த பஞ்சத்தைப்பற்றி நினைவுகூறும்போது, இந்த கோதுமையைப் பற்றியும் கூறுவார். எங்கள் பாட்டி நடந்தேபோய் எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான, பெரிய கரும்பூர் என்ற கிராமத்தின் ரேஷன் கடையிலிருந்து (இது நமது கிராமத்திற்கும், கூரம் கிராமத்திற்கும் இடையில் உள்ள ஒரு கிராமம். அப்போது எங்கள் கிராமத்தில் ரேஷன் கடை இல்லை. நான்கைந்து கிராமங்களுக்கு ஒரு ரேஷன் மட்டுமே இருந்தது ) இந்த கோதுமையை வாங்கி வந்து சுத்தம்செய்து கஞ்சி காய்ச்சித் தருவார்களாம்.
இந்த 'அமெரிக்க கோதுமை'யின் பெருமை அப்போது, தாத்தா கூறும்போது நமக்குத் தெரியாது.
//////......
கிள்ளி வளவன்,
19.03.2017.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக