அதனாலேயே அஷ்டலட்சுமிகளில் தனலட்சுமிக்கு வரவேற்பு அதிகம். சில வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தாலே திருமகளின் அருள் நமக்கு முழுவதுமாகக் கிடைக்கும்.
- வியாழக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி குபேர காலத்தில் குபேரனை வழிபடவேண்டும்.
- குபேரனுக்கு ஊறுகாய் மிக பிடித்தமானதாகும். எனவே வீட்டில் விதவிதமாக ஊறுகாய் இருந்தால் குபேரன் அருள் கிடைக்கும்.
- வீட்டில் வெள்ளைப் புறா வளர்த்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும்.
- தினம் மாலை வேளையில் ஐந்துமுக குத்து விளக்கில் டைமன் கல்கண்டினை போட்டு விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
- பகல் 12 மணிக்கு (அபிஜித் நட்சத்திரத்தில்) திருநங்கையருக்கு திருப்தி அளிக்கும் வண்ணம் உணவளித்து அவர் கையால் பணம் பெற்று கொண்டால் செல்வம் நிலைத்திருக்கும்.
- வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், ஊசி, குடிநீர், உப்பு போன்றவற்றை யாருக்கும் கொடுக்கக்கூடாது.
- வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு அருந்த நீர் கொடுத்து, பின் மஞ்சள், குங்குமம் அளித்தால் தரித்திரம் தீரும்.
- வெள்ளிக்கிழமைகளின் சுக்ர ஓரைகளில் சுண்டல், மொச்சை செய்து நம் வீட்டில் உள்ளோர் மட்டும் சாப்பிட்டால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
- அமாவாசையன்று வீட்டில் கோலம் போடக்கூடாது. தலையில் எண்ணெய் தேய்க்கக்கூடாது. பித்ருக்களை அன்று வழிப்பட செல்வம் சேரும்.
- பசுவின் கோமியத்தினை தொடர்ந்து 45 நாட்கள் வீட்டில் தெளித்து, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி குளித்தால் தரித்திரம் தீர்ந்து பணம் சேரும்.
- பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் தனப்ராப்தி கிடைக்கும்.
- தினசரி குளிக்கும் முன்னர் பசுந்தயிரை உடலில் தேய்த்து குளித்தால் பணவரவு கூடும்.
- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்தால் தரித்திரம் விலகும்.
- தினம் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
- சுக்ர ஓரையில் உப்பு வாங்கினால் செல்வம் குவியும்.
- வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
- மஞ்சளுடன் வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் நடக்கும் இடத்திலும் தெளித்தால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.
- குபேரனுக்கு வாழைத்தண்டில் திரி போட்டு விளக்கேற்றினால் பணவரவு பெருகும்.
- சம்பாதிப்பதி ஒரு தொகையினை சேர்த்து அன்னதானமிட்டால் அதை போல் ஐந்து மடங்கு பணவரவு கிட்டும்.
- மகாலட்சுமிக்கு பச்சைப்பட்டு உடுத்தி வணங்கினால் பணவரவு கூடும்.
- குலதெய்வத்தை நம்பிக்கையுடன் அதிகாலை நேரத்தில் வழிப்பட பணம் வரும்.
- ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
- பூஜை அல்லது கடவுளை வணங்கும் போது கைலி எனும் லுங்கிகளை அணியக்கூடாது.
- இரவில் தயிர் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய் விடும்.
- வீட்டு வாசலைப் பார்த்த வண்ணம் வெங்கடாசலப்பதியின் படத்தை மாட்டி வைத்தால் தனம் பெருகும்.
- பணத்தை ஒருவரிடம் கொடுக்கும் போது தலைப்பகுதி நம்மிடம் இருக்குமாறுக் கொடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக