தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 மார்ச், 2017

இலங்கையின் யுத்த களத்தில் பணியாற்றிய பெண் வைத்தியர் அமெரிக்காவில் சாதித்தது எப்படி?

இலங்கையில் பிறந்து கல்வி கற்று வைத்தியராகி அமெரிக்காவிற்கு சென்று சாதனை படைத்த பெண் தொடர்பில் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது.
அமெரிக்காவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த வைத்தியசாலையில், இலங்கை வைத்தியரான ஷிரானி மாலிக முன்னிலைக்கு கொண்டு வந்தார். இதற்காக சிறந்த வைத்திய முகாமையாளர் என்ற விருதை பெற்றுக்கொண்டார்.
அவரின் நெறிப்படுத்தலின் கீழ் அமெரிக்காவின் முக்கிய 5 வைத்தியசாலைகளில் அதுவும் ஒன்றாகவும் பெயரிடப்பட்டது.
குறித்த வைத்தியரின் கணவர் அரல் பெரேரா பொறியியலாளராக செயற்படுகின்ற நிலையில், அவரது ஒரே மகன் ரவிது பெரேரா விமானங்களில் கடமையாற்றும் அதிகாரியாக செயற்படுகின்றார்.
குறித்த வைத்தியர் தனது வாழ்க்கையில் உயர்ந்தமை தொடர்பில் இலங்கையில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
“எனது ஊர் பண்டாரவல. நான் முதலில் விஷாகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். அதன் பின்னர் தேவி மகளிர் வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் வைத்திய பட்டப்படிப்பை மேற்கொண்டேன். காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ளக பயிற்சிகளை நிறைவு செய்தேன். அதன் பின்னர் கண்டி மற்றும் கொழும்பு வைத்தியசாலையில் சேவை செய்தேன்.
அதன் பின்னர் மனநல வைத்தியம் தொடர்பில் விசேட பயிற்சிகளை ஆரம்பித்தேன். அதன் காலத்தின் தான் நான் முதல் முறை அமெரிக்காவுக்கு சென்றேன்.
அமெரிக்காவின் பல்வேறு வைத்தியசாலைகளுக்குள் உடல் புனர்வாழ்விற்கான ஹெல்த் செவன் கோபரேஷன் வைத்தியசாலை பிரிவு உள்ளது. அந்த வைத்தியசாலை பிரிவிற்கு 140 வைத்தியசாலைகள் சொந்தமாகும்.
அமெரிக்காவில் பல்வேறு நோய்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தாலும் முழுமையாக குணமடையும் வரையில் வீட்டிற்கு அழைத்து செல்ல மாட்டார்கள்.
வைத்தியசாலையில் குணமடையும் நோயாளிகள் அதன் பின்னர் உடல் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு செல்வார்கன். அங்கு அவர்களை நன்கு பராமரித்து மேலும் சிகிச்சை வழங்கி முழுமையான உடல் புனர்வாழ்வு மற்றும் மன மகிழ்ச்சியுடன் நோயாளிகளை வீட்டிற்கு அனுப்புவதே இந்த வைத்தியசாலையின் பொறுப்பாகும்.
2013ஆம் ஆண்டு நான் லாஸ் வேகா புனர்வாழ்வு வைத்தியசாலையில் சேவை செய்தேன். அந்த வைத்தியசாலைக்கு செல்லும் போது வைத்தியசாலையின் நிலைமை மிகவும் கீழ் மட்டத்திலேயே காணப்பட்டது. அனைத்தும் தவறான பக்கத்திலேயே காணப்பட்டது. அதன்போது கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலை செய்வதில்லை. நோயாளிகள் வருகை தருவதில்லை. வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளும் குணமடையாமையினால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு இருக்கும் போது அந்த பகுதியின் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த நோய் தொற்றுகின்றது.
நான் அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தேன். ஒரு வருடம் இலங்கையில் தங்கியிருந்தேன். இலங்கையிலேயே நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முடிவு செய்தேன். பல சமூக வேலைகளை நான் மேற்கொண்டேன்.
தன்னார்வ வைத்தியராக இராணுவத்தில் சேவை செய்தேன். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தன்னார்வ வைத்தியராக நான் தான் சேவை செய்தேன். எனினும் நான் இலங்கையில் பணியாற்றுவதை பலர் விரும்பவில்லை.
இந்த நிலையில் நான் இலங்கையில் இருக்கும் போது எனக்கு ஹெல்த் செவன் வைத்தியசாலையில் இருந்து வைத்தியசாலையை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு வந்தது. அதுவரையிலும் ரொக்ஹில் வைத்தியசாலை மிகவும்
மோசமான நிலையை அடைந்திருந்தது. கணக்கில் பார்த்தால் 140 வைத்தியசாலைகளில் 139வது இடத்தில் அந்த வைத்தியசாலை காணப்பட்டது.
அந்த பிரதேச வைத்தியசாலைகளில் மிகவும் மோசமான வைத்தியசாலையாக அதுவே காணப்பட்டது. அந்த நிலை தொடர்ந்தால் அனைத்து வைத்தியசாலைகளும் அவ்வாறான நிலைக்கு தள்ளப்படும். நான் அமெரிக்க செல்லாமல் இருந்து 2015ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு சென்று மத்திய அட்லாண்டிக் பகுதியில் புனர்வாழ்வு வைத்தியசாலையில் வைத்திய இயக்குனராக கடமையை பொறுப்பேற்றேன்.
நான் சென்ற வைத்தியசாலையில் 60 கட்டில்கள் காணப்பட்ட போதிலும் 29 நோயாளிகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் விரைவில் குணமடையவும் இல்லை.
எனக்கு நிறைய கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது. பல தடைகளை தாண்டி அந்த வைத்தியாசாலையை முதலாம் இடத்திற்கு கொண்டுவர முடிந்தது.. அத்துடன் நானும் வைத்திய இயக்குனர்களில் முதலாம் இடத்தை பிடித்தேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக