சங்கத் தமிழரும் விண்வெளி ஆய்வும்!
சூரியன் செல்லுகின்ற பாதையும் அந்தச் சூரியனின் தாக்க விளைவுகளின் எல்லைகளும் அந்த எல்லைக்குள் அடங்கும் வான மண்டலமும் அந்த வான மண்டலத்திலே காற்று வீசும் திசையும் எதையும் பற்றாறு அந்தரத்தில் நிற்கும் வானமும் ஆகிய விண்ணியல் இரகசியங்களை எல்லாம் சென்று பார்த்து ஆராய்ந்து அளவீடு செய்து இவையெல்லாம் என்றைக்கும் இப்படித்தான் இருக்கும் என்று கூறிய முன்னோர்களைப் போல இன்றும் ஒன்றினை ஆய்வு செய்து அது இப்படிப்பட்டது என்று அறிவிக்கும் கல்வியாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்!
செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலையிய காயமும் என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே!
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலையிய காயமும் என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே!
(புறநானூறு செய்யுள் 30 காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்)
-இரா.சம்பந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக