தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 31, 2017

நீங்கள் கடவுச்சீட்டு வைத்திருப்பவரா? கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்

கடவுச்சீட்டினை அத்தாட்சிப்படுத்தல் சேவை
கடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தின் பிரதியை எவ்வாறு அத்தாட்சிப்படுத்திக் கொள்வது..?
 • குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தூதரகச் சேவைகள் கிளையினால் அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன.
இச்சேவையைப் பெற அவசியமான ஆவணங்கள்
 • மூலக் கடவுச்சீட்டும் அத்தாட்சிப்படுத்த அவசியமான அதன் நிழற் பிரதிகளும்.
இச்சேவைக்குரிய தயாரித்தல் கட்டணம்
 • முதற் பிரதிக்காக இலங்கை ரூபா 250.00
 • ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளாயின் இலங்கை ரூபா 500.00 (மூன்று பிரதிகள் வரை அத்தாட்சிப்படுத்திக் கொள்ளலாம்)
கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்புச் சேவை
கடவுச்சீட்டின் பிரதான தரவுகள் பக்கத்தினதும் சம்பந்தப்பட்ட புறக்குறிப்புக்களினதும் அரபு மொழிபெயர்ப்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையினால் வழங்கப்படும்.
கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யாது?
 • விண்ணப்பதாரி தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகை தரல் வேண்டும்.
இச்சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்புடைய தயாரித்தல் கட்டணம்
 • ஒரு கடவுச்சீட்டினை மொழிபெயர்க்க 1000/- இலங்கை ரூபா அறவிடப்படும்.
கடவுச்சீட்டுகளை இலங்கை அரச எல்லைக்கு அப்பால் வெளிநாட்டுப் பயண முடிவிடங்களுக்கு தூதுச் சேவை (Courier Service) மூலமாக அனுப்பிவைக்க அனுமதி வழங்குதல்.
பொதுவான தகவல்கள்
 • இலங்கை கடவுச்சீட்டுக்களை தூதுச் சேவை (Courier Service) மூலமாக வெளிநாட்டுப் பயண முடிவிடங்களுக்கு அனுப்பிவைக்க குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து அனுமதி பெறப்படல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
 • கீழே சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ள ஏற்புடைய ஆவணங்களின் மூலப்பிரதிகளுடன் சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பப்பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
 1. காட்டப்பட்டுள்ள முகவரிக்கு கடவுச்சீட்டினை பாதுகாப்பாக ஒப்படைக்க இணக்கம் தெரிவித்த Courier சேவை வழங்குபவரின் கடிதம்.
 2. Courier சேவை மூலமாக அனுப்பிவைக்க அனுமதி வழங்குமாறு கோரி விண்ணப்பதாரியால் கையொப்பமிடப்பட்ட கடிதம்.
 3. கடவுச்சீட்டினை Courier சேவை மூலமாக உண்மையாகவே அனுப்பிவைக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் (இலங்கையில் சம்பந்தப்பட்ட நாட்டினை பிரதிநிதித்துவம் செய்கின்ற நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுக்கும் கடிதம்.)
இச்சேவைக்குரிய தயாரித்தல் கட்டணம்
 • ஒரு கடவுச்சீட்டுக்காக 1000/- இலங்கை ரூபா.
http://www.tamilwin.com/srilanka/01/141151?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment